எதிர்நீச்சல் சீரியலில் தேவயானி! இப்படி ஒரு டுவிஸ்ட்டா?

எதிர்நீச்சல் சீரியலில் தேவயானி! இப்படி ஒரு டுவிஸ்ட்டா?
X
எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் தேவயானி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறந்த சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் மிகவும் சுவாரஸ்யமானதாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.

குணசேகரன் அவனது 3 தம்பிகள், அவர்களது மனைவி, தங்கை, அம்மா, அப்பத்தா, அவர்களின் உறவினர்கள், கரிகாலன், ஜான்சி ராணி என இவர்களைச் சுற்றிய கதைதான் எதிர்நீச்சல். ஒரு குடும்பத்தில் அடங்கி ஒடுங்கி வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்கள், அவர்களை அடக்கி ஆளும் ஆண்கள். திடீரென வரும் மருமகளால் அனைவரது தன்மானமும் எழும்புகிறது. கேள்வி கேட்கிறார்கள். இதனால் குடும்பத்துக்குள் குழப்பம் உண்டாகிறது.

தங்கையின் திருமணத்தை பிடிக்காதவனோடு ஏற்பாடு செய்யும் அண்ணன்களுக்கு ஒன்று தெரிய வருகிறது. தனது எதிரியின் தம்பியைக் காதலிக்கிறாள் தனது தங்கை என்பதுதான் அது. ஆனால் தனது தங்கையே ஆனாலும் அவளை எதிரியின் தம்பிக்கு திருமணம் செய்து தரமாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறார் குணசேகரன்.

குணசேகரனுக்கு ஆதரவாக தம்பிகள் ஞானசேகரன், கதிர் இருவரும் நிக்கிறார்கள். கடைசி தம்பி சக்தி, அவனது மனைவி ஜனனி, தங்கை ஆதிரா எதிர்க்கிறார்கள். ஒரு வழியாக இந்த திருமணத்தை நடத்தி முடிக்க ஒரு வழியைக் கண்டிபிடிக்கிறார்கள். குணசேகரன் நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டிருக்கும் அப்பத்தாவின் 40 சதவிகித சொத்தை தனக்கு எழுதி தந்தால் திருமணத்துக்கு சம்மதிப்பேன் என்கிறார் குணசேகரன். நிச்சயதார்த்தம் வரை சென்ற குடும்பம் திடீரென பல்டி அடிக்கிறது. காரணம் குணசேகரன் அந்த சொத்தை இப்போதே எழுதி தர கேட்கிறான்.

அப்பத்தாவும் எழுதி கொடுக்க, திருமணத்தை வேண்டாம் என்கிறான். இதனால் கோமாவுக்கு போகிறார் அப்பத்தா. குணசேகரன் அவனது தங்கையை கரிகாலனுக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்கிறான். இப்போது அப்பத்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் இந்த கதையில் தேவயானியும் இணையவுள்ளது தெரியவந்துள்ளது. அவர் ஒரு மருத்துவராக அறிமுகமாவாராம். அவரின் கதாபாத்திரத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்தடுத்த எபிசோட்களை நீட்ட முயற்சி செய்யப்போகிறார்களாம்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி