சர்தார் 2 படத்தின் ஹீரோயின் இவரா? யாரிந்த ஆஷிகா?

சர்தார் 2 படத்தின் ஹீரோயின் இவரா?  யாரிந்த ஆஷிகா?
X
சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் புதுமுக நடிகை ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தில் புதுமுக நடிகை ஹீரோயினாக அறிமுகமாகிறார். இவருக்கு இதுதான் தமிழில் முன்னணி கதாபாத்திரத்தில் முதல் படமாக அமையவுள்ளது.

கார்த்தி நடிப்பில் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் 2022 ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் சர்தார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் அசத்தியிருப்பார். படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷி கன்னா, ரெஜிஷா விஜயன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் லைலாவும் நடித்திருப்பார்கள். இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சர்தார் படத்தின் அடுத்த பாகமும் தயாராக உள்ளது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சர்தார் 2 படத்தின் நாயகியாக முதலில் மாளவிகா மோகனன் அறிவிக்கப்பட்டார். இவர் தற்போது தங்கலான் படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். முன்னதாக விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இவர் சமூக வலைத்தளங்களில் முக்கியமாக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்து வருகிறார். இந்நிலையில், விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக இருக்கிறது.

இதனிடையே தற்போது நடிகை ஆஷிகா ரங்கநாதனும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. சினிமா வட்டாரங்களில் இருந்து வந்த தகவலின்படி, இவர்தான் படத்தின் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. பிரின்ஸ் பிக்சர் தயாரிப்பில் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது.

ஆஷிகா ரங்கநாதன் இந்த படத்தின் நாயகியாக நடிக்கிறார். இவரது பிறந்தநாள் இன்று. அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் பிறந்த நாள் வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.



Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!