'பொன்னியின் செல்வன்' படத்துக்காக வந்த வாய்ப்பை மறுத்த நடிகை அமலாபால்..!

பொன்னியின் செல்வன் படத்துக்காக வந்த வாய்ப்பை மறுத்த நடிகை அமலாபால்..!
X

நடிகை அமலா பால்

இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்கக்கிடைத்த வாய்ப்பை, மறுத்ததாகக் கூறியுள்ளார் நடிகை அமலாபால்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், கல்கியின் வரலாற்றுப் புதினமான 'பொன்னியின் செல்வன்' படம் மிக பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோருடன் நடிகைகள் த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.

அண்மையில், இப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்தநிலையில், இந்தப் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை, தான் நிராகரித்துவிட்டதாக நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, பேட்டியொன்றில் பேசிய அமலா பால், "நான் மணி சாரின் மிகப்பெரிய ரசிகை. ஒருமுறை அவர் நடத்திய ஒரு ஆடிஷனில் கலந்துகொண்டேன். ஆனால், அந்தமுறை நான் அவர் நடத்திய ஆடிஷனில் தேர்வாகவில்லை. அதற்குப் பிறகு 2021-ல் அவரது 'பொன்னியின் செல்வன்' படத்தின் புராஜெக்ட்டுக்கு என்னை அணுகினார் மணி சார்.

ஆனால், அதில் நடிக்கும் சூழ்நிலையில் நான் இல்லை. அதனால், முடியாது என சொல்லிவிட்டேன். அதேநேரம், அதற்காக இப்போது வருத்தப்படுகிறேனா என்று கேட்டால் 'இல்லை' என்பதுதான் இப்போதைய எனது பதில்" என்று தெரிவித்துள்ளார் நடிகை அமலா பால்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!