நடிகை ஐஸ்வர்யாவின் நகலா… அல்லது அவரேதானா… அதிசயப்படுத்தும் ஆஷிதா சிங்..!

நடிகை ஐஸ்வர்யாவின் நகலா… அல்லது அவரேதானா… அதிசயப்படுத்தும் ஆஷிதா சிங்..!
X
நடிகை ஐஸ்வர்யா ராயைப் போல் உள்ள ஆஷிதா சிங் சமூக வளைத்தளங்களை வைரலாகி வருகிறார்.

இதென்ன அதிசயம்… ஐஸ்வர்யா ராய் வடிவில் அசலா… நகலா என ஒருகணம் நம் கண்ணே நம்ப மறுக்கும் முகமாக சமூக வலைத்தளகளில் தன் புகைப்படத்தையும் வீடியோக்களையும் வெளியிட்டு வைரலாகி வருகிறார் ஆஷிதா சிங் எனும் இள அழகி. இவர், நடிகை ஐஸ்வர்யா ராய் போன்ற அச்சு அசலான முகஜாடை கொண்டிருப்பதால், இவர் பதிவிடும் புகைப்படங்கள் வீடியோக்களுக்கு இளவட்டக் கூட்டத்திலிருந்து எகிறுகிறது லைக்குகளும் கமெண்ட்களும். அதோடு, இவருக்கென மிகப் பெரியதொரு ரசிகர் கூட்டமும் ஏராளமான எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது.

ஆஷிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்த படத்திலிருந்து வசனங்களையும் பாடல்களையும் இவரது நடிப்பில் பதிவேற்றி வருகிறார். அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆஷிதா சிங்கின் கண்கள் முதல் மூக்கு மற்றும் உதடுகள் வரை அனைத்தும் ஐஸ்வர்யா ராய் போலவே உள்ளது என்பது அனைவரையும் வியக்க வைக்கிறது.

அவருக்கு, முகநூல் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வளைத்தளப் பக்கங்களில் அவரை லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில், ஆஷிதாவுக்கு 2,50,000 பின்தொடர்பவர்கள் உள்ளனர் என்பது நெட்டிசன்கள் வியந்து கூறும் உண்மை. அவரது, இன்ஸ்டாகிராமில் 90கள் மற்றும் 2000களின் ஹிந்தி பாடல்கள் மற்றும் வசனங்கள் நிரம்பி வழிகின்றன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!