அஜித் உதவியெல்லாம் பண்ணலையாம்! சும்மா போஸ்தானாம்..!

அஜித் உதவியெல்லாம் பண்ணலையாம்! சும்மா போஸ்தானாம்..!
X
அஜித் உதவியெல்லாம் பண்ணலையாம்! சும்மா போஸ்தானாம்..!

அஜித் எந்த உதவியும் செய்யவில்லை எனவும் அவர் சும்மா போஸ்தான் கொடுத்தார் எனவும் வலைப்பேச்சு பிஸ்மி காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் விஷ்ணு விஷால், ஆமீர்கான் போன்றவர்களுக்கு உதவி செய்திருக்கிறார். ஏன் பாமர மக்களுக்கு செய்யவில்லை என்று கேட்டுள்ளார்.

மழை வெள்ள பாதிப்பு வந்ததும் மற்றவர்களுக்கு உதவி செய்யபவர்கள் களத்தை அடையும் முன்னரே வழக்கம்போல தல என்ன பண்ணார் தெரியுமா போன்ற செய்திகள் வலம் வரத் தொடங்கிவிட்டன. சைலண்ட்டாக உதவிய தல, லட்சங்களை கொடுத்த அஜித் என அவரது ரசிகர்கள் செய்யப்படாத உதவிகளுக்கு விளம்பரம் தேடிக் கொண்டிருந்தனர். அதைத்தான் வலைப்பேச்சு நிகழ்ச்சியில் பிஸ்மி தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அவரது சக போட்டியாளரான விஜய், தனது மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு தேவையானதை செய்ய உத்தரவிட்டிருந்தார் எனவும் பாராட்டினர். ஆனால் உறுத்தலாக, புஸ்ஸி ஆனந்த் விளம்பரம் தேடிய வீடியோக்களைப் பார்க்க நேர்ந்தது என்றும் தெரிவித்திருந்தார். அவர்கள் பலரும் விஜய் புகைப்படங்களையும், பதாகைகளையும் பிடித்துக்கொண்டே வேண்டுமென்றே விளம்பரம் தேடியது செயற்கையாக இருந்தது என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

சூர்யா, கார்த்தி இருவரும் இணைந்து முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாய் உதவி செய்திருந்தனர். அதுமட்டுமின்றி தங்கள் ரசிகர் மன்றங்கள் மூலம் உதவிகளை களத்தில் முடுக்கிவிட்டுள்ளனர். இதுதவிர இன்னும் தேவைப்படும் நிதி அளிக்கவும் அவர்கள் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் ரிலீஸ் ஆகியிருந்த நாடு மற்றும் பார்க்கிங் படக்குழுவினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்திருந்தனர். முக்கியமாக பார்க்கிங் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் செய்த உதவிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய பங்குக்கு 1 லட்சம் நிதி உதவி செய்திருந்தார். மூவரும் தலா 1 லட்சம் ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பியிருந்தனர்.

நடிகர், இயக்குநர் பார்த்திபன் தன்னால் இயன்ற உதவிகளை செய்த வீடியோக்களை பார்க்கமுடிந்தது. மேலும் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் களத்தில் இறங்கி 3 நாட்களாக உணவு, பால் பொருட்களை கொடுத்து உதவி வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பலரும் இந்த பணியில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் யாரும் விளம்பரம் தேடிக்கொள்ளாமல் கமல்ஹாசன் ரசிகர்களாகவே பணிகளை செய்து வருகின்றனர்.

லாரன்ஸ், ரஜினி எங்கே?

வழக்கமாக எந்த பிரச்னை என்றாலும் உடனடியாக வந்து உதவிகளை அளவில்லாமல் செய்து வரும் ராகவா லாரன்ஸ் இந்த முறை வெளியிலேயே தெரியவில்லை. அவர் என்ன செய்கிறார் என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. அதுபோல ரஜினிகாந்தும் என்ன செய்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அதேநேரம் ரஜினிகாந்த் ரசிகர்கள் சிலர் உதவி செய்து வந்ததை பார்க்க முடிந்தது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!