தேசிய விருது பட்டியலில் நடிகர் யோகிபாபுவின் 'மண்டேலா'..!

தேசிய விருது பட்டியலில் நடிகர் யோகிபாபுவின் மண்டேலா..!
X
மண்டேலா பட போஸ்டர்.
Indian National Awards List- நடிகர் யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படமும் தேசிய விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

Indian National Awards List- நடிகர் யோகிபாபு நடிப்பில் கடந்த 2021ல் வெளியான படம் 'மண்டேலா'. மடோனி அஷ்வின் இயக்கத்தில் இப்படம் அரசியல் நையாண்டி படமாக வெளியானது. ஒய்நாட் ஸ்டூடியோஸ், விஸ்பெரி பிலிம்ஸ் மற்றும் ரிலயன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தது. 'மண்டேலா' படம் சிறப்பான சமூக அக்கறையை வெளிப்படுத்தும் படமாக அமைந்தது. படத்தின் ஆரம்பம் முதலே ரசிகர்களை சிந்திக்கவும் அதே நேரத்தில் சிரிக்கவும் வைத்தது 'மண்டேலா'.

அற்புதமான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளுடன் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார் மடோனி அஸ்வின். கமர்ஷியல் படங்களை இயக்கி அதன்மூலம் வெற்றியை சாத்தியப்படுத்தி கோடிகளில் பணத்தை அள்ளும் இயக்குநர்கள் மத்தியில் கதையில் சமரசம் செய்து கொள்ளாமல் மடோனி அஷ்வின் கொடுத்திருந்த மண்டேலா படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில், 'மண்டேலா' படத்திற்கான சிறந்த வசனகர்த்தாவிற்கான விருது மடோனி அஷ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 'மண்டேலா' படக்குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்