இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அடுத்தப் படத்தின் நாயகனாக நடிகர் யாஷ்..!

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அடுத்தப் படத்தின் நாயகனாக நடிகர் யாஷ்..!
X
'கே.ஜி.எஃப்' பட நாயகனான நடிகர் யாஷ், அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது 'மாநகரம்' திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே தனது தனித்த முத்திரையை ஆழமாகப் பதித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ்.

மேக்கிங், திரைக்கதை என தனக்கான ஓர் உலகத்தை கட்டமைத்துவிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் 'கைதி' படத்தை இயக்கினார். படத்தில் நாயகி இல்லை. காதல் இல்லை. குத்துப் பாட்டுக்கு கொஞ்சமும் இடமில்லை. ஆனாலும், முழுக்க முழுக்க டார்க் மோட் ஆக்‌ஷன் ட்ரீட் கொடுத்து ரசிகர்களை அசத்தி மெய்சிலிர்க்க வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய்யுடன் 'மாஸ்டர்', நடிகர் கமல்ஹாசனுடன் 'விக்ரம்-2' என மேலும் இரண்டு ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களை ரசிகர்களுக்கு அதகள விருந்து அளித்து, உற்சாகம் ஏற்றி உச்சம் தொட்டார். நான்கே படங்களில் இந்தியத் திரையுலகின் மோஸ்ட் வாண்டட் இயக்குநராக மாறி, தன் மீதான பார்வையை அனைவரும் பதிக்கும் வண்ணம் செய்துவிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

'விக்ரம்-2' திரைப்படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து விரைவில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார் என்பது கோலிவுட் பட்சிகள் சொல்லும் செய்தி. அதோடு, இப்படங்களை அடுத்து, 'கைதி' இரண்டாம் பாகம், 'விக்ரம் - 2'வின் தொடர்ச்சியாக 'விக்ரம்-2' வின் அடுத்த பாகம் என அடுத்தடுத்து படங்கள் இயக்குவதற்கு தயாராக இருக்கும் நிலையில், இப்போது, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து புதிய அப்டேட் ஒன்று புறப்பட்டு வெளியாகியுள்ளது.

நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா, நரேன், காளிதாஸ் ஜெயராம் என பெரிய நட்சத்திரப் பட்டாளங்களோடு 'விக்ரம்-2' படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அதனைத் திரையரங்குகளில் வெளியிட்டு அதகளப்படுத்தினார். படம் பம்பர் ஹிட் என்று வியக்க வைத்து வசூலில் சாதனை படைத்து, பல முந்தைய சாதனைகளையெல்லாம் முறியடித்து முன்னின்றது. அதுவரை தமிழ்த் திரையுலகில் இருந்த அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்து 'விக்ரம்-2' படம் புதிய சாதனை படைத்ததை வியந்து பாராட்டாதவர் எவருமே இல்லை. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ''இனி நான் இயக்கும் படங்களில் யுனிவர்ஸ் கனெக்டிங் இருக்கும். அதாவது லோகேஷ் யுனிவர்ஸ் என்பதை உருவாக்கியுள்ளேன்'' எனக் கூறினார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இந்த ஆண்டு இறுதிக்குள் நடிகர் விஜய் நடிக்கவுள்ள 'தளபதி 67' படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்கின்றனர் படம் குறித்த அப்டேட் அறிந்தவர்கள். மேலும், இது லோகேஷ் யுனிவர்ஸில் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 'தளபதி 67'க்குப் பிறகு, கார்த்தி நடிக்கும் 'கைதி 2', அடுத்து, 'விக்ரம்-2' அடுத்த பார்ட் படங்களை இயக்குவார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்று எதிர்பார்க்கப்பட்டிருக்கும் தருணத்தில், தற்போது வெளியாகி இருக்கும் அப்டேட் செய்தி என்னவென்றால், இப்போது, 'கே.ஜி.எஃப்' நாயகன் யாஷுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் யாஷ் நடிக்கும் படத்திற்கான கதையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயார் செய்துவிட்டதாகவும், இதுவும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் இருக்கும் என்றும் தெரிய வருகிறது. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான 'கேஜிஎஃப்' படம் மூலம் பான் இந்தியா சூப்பர் ஸ்டாராக அதகளப்படுத்தி வருபவர் நடிகர் யாஷ். கேங்ஸ்டர் படங்களுக்காகவே அளவெடுத்து செய்ததைப் போல அம்சமாக இருக்கும் நடிகர் யாஷ், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி வைத்தால், இன்னும் தரமாக இருக்கும் என்பதுதான் ஒட்டுமொத்த ரசிகர்களின் குரலாக ஒலிக்கிறது.

இதனிடையே, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் யாஷ் இணையும் படத்தை ஹோம்பலே நிறுவனமே தயாரிக்கவுள்ளதாகவும் விவரமறிந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகி, அத்தகவல் சமூக வலைத்தளங்கள் முழுவதும் வைரலாகி வருகிறது. ஆனாலும், இன்னும் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதுதான் நிதர்சனம்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!