நடிகர் விக்ரம் பிரபுவின் 'டாணாக்காரன்' பிரஸ் மீட் இன்னிக்கு இருக்குது

காவல்துறை ஆரம்பக்கட்ட குளறுபடியை கதைக்களமாகக் நடிகர் விக்ரம் பிரபுவின் 'டாணாக்காரன்' பிரஸ் மீட் இன்னிக்கு இருக்குது!
வெற்றிமாறனிடம் அசோசியேட் இயக்குநராக பணிபுரிஞ்ச, சூர்யாவின் 'ஜெய் பீம்' படத்தில் காவல்துறை அதிகாரியாக எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிச்சு பாராட்டுக்களைக் குவிச்ச 'தமிழ்' டைரக்ஷனில் உருவான படமே 'டாணாக்காரன்'
காவல்துறை ஆரம்பக்கட்ட குளறுபடியை கதைக்களமாகக் கொண்ட இப்படத்தில் நடிகர் லால், எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். அஞ்சலி நாயர் ஹீரோயினாக நடிக்க ஜிப்ரான் இசையமைச்சிருக்கார்.
இப்படத்தின், கதைக்களம் 1998 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகம் இதற்கு முன் பல காவல்துறை சார்ந்த திரைப்படங்களைக் கண்டுள்ளது. ஆனால் 'டாணாக்காரன்' அந்த வகைப் படங்களில் தனித்துவமான, இதுவரை வெள்ளித்திரையில் ரசிகர்கள் பார்த்திராத ஒரு உலகத்தைக் காட்டும் என்று சொல்லப்படுது. அதேபோல, நடிகர் விக்ரம் பிரபு இதற்கு முன் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த கதாபாத்திரம் இதுவரை அவர் நடித்த படங்களில் ஒரு மைல்கல்லாக இருக்குமாம்.
'மாயா', 'மான்ஸ்டர்', 'மாநகரம்' உள்ளிட்ட சிறப்பு படைப்புகளை வழங்கிய பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த வருடம் வெளியிடும் முதல் திரைப்படம் இது. எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, பி கோபிநாத், தங்க பிரபாகரன் ஆர் உள்ளிட்டோர் இந்தப் படத்தைத் தயாரிச்சிருக்காங்க.
இப்படத்தின் இயக்குநர் தமிழ், இதற்கு முன் தமிழக காவல்துறையில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. முடிஞ்சு சில பல மாசங்கள் ஆன இந்த 'டாணாக்காரன்' டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வரும் ஏப்ரல் மாசம் 8ம் தேதி வெளியாக இருக்கும் சூழலில் இப்படத்தின் புரொமோசனுக்காக பிரஸ் மீட் ஒன்றுக்கு இன்னுக்கு காலையிலே நடக்கப் போறதா அழைப்பு வந்துருக்குது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu