'கோப்ரா' ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறார் நடிகர் விக்ரம்..!

கோப்ரா ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறார் நடிகர் விக்ரம்..!
X
சென்னையில் நாளை (11ம் தேதி) நடைபெறும் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் கலந்துகொள்ளவிருக்கிறார்.

நடிகர் விக்ரம் நேற்று முன்தினம்(08/07/2022) திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஹார்ட் அட்டாக் என்ற செய்தி தீயாய் பரவியது. விக்ரம் ரசிகர்களும் அவரது நலம் விரும்பிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால், விக்ரமுக்கு ஹார்ட் அட்டாக் இல்லை இரண்டு மூன்று நாட்களாக இருந்த காய்ச்சலால் ஏற்பட்ட அசௌகரியம்தான் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கக் காரணம் என்று விக்ரம் தரப்பினர் தகவல் தெரிவித்தனர். அதோடு, பொய்யாகப் பரப்பப்படும் வதந்திகளை யாரு நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

இந்தநிலையில், நேற்று நலமுடன் நடிகர் விக்ரம் வீடு திரும்பினார். காவேரி மருத்துவமனை தரப்பில் நடிகர் விக்ரம் குறித்து வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. இதயத்தில் லேசான அசௌகரியம் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது நலமுடன் உள்ளார். யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதோடு நாளை, ஜூலை 11 ம் தேதி சென்னையில் நடக்கும் 'கோப்ரா' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் விக்ரம் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை படத்தின் விநியோகஸ்தரான உதயநிதி ஸ்டாலினே உறுதி செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, ஆடியோ வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.'கோப்ரா' ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை போனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் இரவு 7 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி உள்ள ஆக்ஷன், த்ரில்லர் படமான 'கோப்ரா' படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் அதிகபட்சமாக 20 கெட்அப்களில் நடித்துள்ளதாகத் தெரிய வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் ஐந்து பாடல்களும் நாளை வெளியாகவிருக்கிறது. ஆகஸ்ட் 11 ம் தேதி 'கோப்ரா' படம் திரையரங்குகளில் வெளியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil