'பொன்னியின் செல்வனி'ல் ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரம்..!

பொன்னியின் செல்வனில் ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரம்..!
X

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரம். 

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிகர் விக்ரம் ஆதித்த கரிகாலனாக நடிக்கும் போஸ்டர் வெளியானது.

இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படம் 'பொன்னியின் செல்வன்'. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடிகர் விக்ரம், இராஜராஜசோழன் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் முக்கியக் கதாபாத்திரங்களில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட இந்தியாவின் புகழ்பெற்ற பல முன்ணனி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இந்தப் படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் தோன்றும் புதிய போஸ்டரை லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் தோன்றும் போஸ்டரை வெளியிட்டுள்ளதைப் போன்று தினந்தோறும் ஒவ்வொரு கதாபாத்திரமும் போஸ்டராக வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!