நடிகர் விஜய் பேசியது 20 ஆண்டுக்கு முன் ரஜினிகாந்த் பேசியதன் காப்பியா?

நடிகர் விஜய் பேசியது 20 ஆண்டுக்கு முன் ரஜினிகாந்த் பேசியதன் காப்பியா?
X

vijay news, vijay latest newsவாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர்  விஜயின் ஆக்சன்கள்.

vijay news, vijay latest newsநடிகர் விஜய் பேசியது 20 ஆண்டுக்கு முன் ரஜினிகாந்த் பேசியதன் காப்பி என இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

vijay news, vijay latest newsநடிகர் விஜய் தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரமாக கருதப்பட்டு வருகிறார். இதற்கு காரணம் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பது மட்டும் இன்றி அவரது படங்கள் வசூலிலும் கோடிக்கணக்கில் புரள்வது தான்.

vijay news, vijay latest newsவிஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகிறது. வாரிசு படத்தை தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கி உள்ளார். தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து உள்ளார். தமிழகத்தில் மட்டும் இன்றி ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் அதிக அளவில் தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இதற்கு உடன் படாத நிலையில் இது தொடர்பாக சமரச பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

vijay news, vijay latest newsஇந்த நிலையில் தான் நடிகர் விஜயின் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். விஜயின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கில் வந்து குவிந்திருந்தனர். இதன் காரணமாக ரசிகர்களின் கூட்டத்தால் அரங்கம் நிரம்பி வழிந்தது.

vijay news, vijay latest newsரசிகர்களின் இந்த ஆர்வத்தினால் உற்சாகம் அடைந்த விஜய் அவர்களை பார்த்து கையசைத்தார். செல்பி எடுத்துக்கொண்டார். அந்த செல்பி மற்றும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து உள்ளார். விழாவில் வழக்கம் போல் விஜய் ஒரு குட்டி கதை சொன்னார். அது காப்பி என தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

vijay news, vijay latest newsதனக்கு போட்டியாளராக 90களில் ஒரு நடிகர் வளர்ந்தார் என தொடங்கி விஜய் அந்த கதையை சொன்னார். அவர் அஜித் பற்றி தான் பேசுகிறார் என நினைத்தால் கடைசியில் அவர் 'எனக்கு நானே போட்டியாளர்' என கூறி இருந்தார்.

vijay news, vijay latest newsவிஜய் மேடையில் பேசிய விஷயம் ஏற்கனவே ரஜினி காந்த் கடந்த 1992ம் ஆண்டு படையப்பா படம் வெளி வந்த போது பேசியது என குறிப்பிட்டுள்ள நெட்டிசன்கள் அன்று ரஜினி பேசியதன் காப்பியையும் வெளியிட்டு கலாய்த்து இருக்கிறார்கள். அந்த வீடியோவில் ரஜினி எனக்கு நான் போட்டி, எனது படத்திற்கு எனது படம் தான் போட்டி என்று குறிப்பிட்டுள்ளார்.எனவே விஜய் இப்போது பேசி இருப்பது 20 வருடங்களுக்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் பேசிய ஒன்று என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அந்த வீடியோவும் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!