நடிகர் விஜய் யின் 'தளபதி- 67' படத்திற்கு ஏகப்பட்ட மவுசு

நடிகர் விஜய் யின் தளபதி- 67 படத்திற்கு ஏகப்பட்ட மவுசு
X
Vijay Actor New Movie - நடிகர் விஜய் யின் 'தளபதி- 67' படத்திற்கு ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பே ஏகப்பட்ட மவுசு கூடி உள்ளது.

Vijay Actor New Movie -தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் விஜய்யுடன் ஏகப்பட்ட முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர்.மேலும் விறுவிறுப்பாக நடந்து வரும் அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்ட வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகிறது. அதன்படி நேற்று கூட முக்கிய நடிகர்களுடன் விஜய் நடித்துள்ள காட்சியின் வீடியோ வெளியானது.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படமாக உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார். ஆனால் அப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. மேலும் நேற்று அப்படத்தின் திரைக்கதையில் பணியாற்றி வரும் இயக்குநர் ரத்னகுமார், இயக்குநர் லோகேஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு குட்டியான 67 அப்டேட்டை கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தளபதி 67 படத்தின் OTT உரிமத்தை Netflix நிறுவனம் வாங்க பேச்சுவார்த்தை நடை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருப்பதன் மூலம் விஜய் படம் என்றாலோ அதற்கென ஒரு தனி மவுசு இருப்பதை தான் காட்டுகிறது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!