ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அளித்த பிறந்தநாள் ட்ரீட்: தளபதி-66 ஃபர்ஸ்ட் லுக்கும் டைட்டிலும்..!
'வாரிசு' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.
நடிகர் விஜய் ஆண்டுதோறும் தன் ரசிகர்களுக்கு சர்ப்ரைசஸ் ட்ரீட் அளித்து உற்சாகப்படுத்துவார். அவ்வகையில்தான், அவரது 66-வது படம் தளபதி-66 என்கிற தற்காலிகத் தலைப்பில் விறுவிறுவென்று வளர்ந்து வந்ததைத் தொடர்ந்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டைட்டிலும் வெளியிட்டப்பட்டுள்ளது.
ஜூன் 22 நடிகர் விஜய்யின் 48ஆவது பிறந்தநாள். இந்தநிலையில், இன்று ஜூன் 21 மாலை தளபதி-66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனும் முதல் பார்வை வெளியிடப்படட்டுள்ளது. அத்துடன், இன்று இரவு 12 மணிக்கு இரண்டாவது பார்வையும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்துக்கு 'வாரிசு' எனும் தலைப்பிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் விஜய் கோட்-சூட் அணிந்து கம்பீரமாகக் காட்சி தருகிறார். படத் தலைப்பின் கீழ் 'The Boss Returns' என டேக் லைனும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில், விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக நடிகை ராஷ்மிகா மந்தானா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன், நடிகர்கள் பிரகாஷ்ராஜ், ஷாம், யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே களம் இறங்கி கலக்கவிருக்கிறது. தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu