சினிமாவுக்கு டாட்டா காட்டும் விஜய்! அடுத்த 3 வருசத்துல இதான் நடக்கப்போகுது!

சினிமாவுக்கு டாட்டா காட்டும் விஜய்! அடுத்த 3 வருசத்துல இதான் நடக்கப்போகுது!
X
சினிமாவிலிருந்து சில ஆண்டுகளுக்கு ஓய்வு எடுத்துக்கொள்ள விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சினிமாவிலிருந்து சில ஆண்டுகளுக்கு ஓய்வு எடுத்துக்கொள்ள விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. இந்த படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா இணைந்துள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவில் எகிறியுள்ளது. மன்சூர் அலிகான், கௌதம், மிஷ்கின், அர்ஜூன், சஞ்சய் தத் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் இருக்கிறது.

லியோ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் விஜய் சமீபத்தில் டப்பிங் பணிகளை துவஹ்கியுள்ள நிலையில், வரும் அக்டோபர் 19ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதல் சிங்கிள் கடந்த மாதம் விஜய் பிறந்தநாளின் போது வெளியானது.

லியோ படத்தைத் தொடர்ந்து ஏஜிஎஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கிறார் விஜய். இந்த படத்துக்கு இரண்டாவது முறையாக இணைந்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. அக்டோபர் முதல் வாரம் முதல் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துடன் சினிமாவுக்கு சில ஆண்டுகள் டாட்டா காட்ட இருக்கிறாராம் தளபதி விஜய். அவர் அடுத்த ஆண்டு தனது மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்றி அறிவிக்க இருக்கிறாராம். அதன்பிறகு அடுத்த 3 ஆண்டுகள் வரப்போகும் தமிழ்நாடு தேர்தலுக்காக இறங்கி வேலை செய்யப்போகிறார் என்கிறார்கள்.

இந்நிலையில் விஜய் தரப்பில் தொடர்புகொண்டு பேசியபோது இதில் உண்மையில்லை எனவும், அரசியல் குறித்தும் சினிமாவுக்கு இடைவெளி கொடுத்து அரசியலில் முழுநேரமாக ஈடுபடுவது குறித்தும் விஜய் இதுவரை முடிவு செய்யவில்லை எனவும் தகவல் தெரிவிக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் தளபதி அதிகாரப்பூர்வமாக மக்களுக்கு அறிவித்துவிட்டு பிறகுதான் செயல்படுவார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!