வைரலாகும் தளபதி விஜய் வீடியோ! இப்படி ஆகிடிச்சே..! இத கவனிச்சீங்களா?

வைரலாகும் தளபதி விஜய் வீடியோ! இப்படி ஆகிடிச்சே..! இத கவனிச்சீங்களா?
X
வைரலாகும் தளபதி விஜய் வீடியோ! இப்படி ஆகிடிச்சே..! இத கவனிச்சீங்களா?

சென்னையிலிருந்து தாய்லாந்து சென்றபோது கெத்தாக வந்த விஜய், தற்போது சென்னை திரும்புகையில் களையிழந்து தோற்றமளித்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது.

தளபதி விஜய்யின் 68வது திரைப்படம் தயாராகி வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில், 2ம்கட்ட கட்ட படப்பிடிப்புக்காக, இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினர் கடந்த வாரம் பாங்காக் சென்றிருந்தனர். தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.

லியோ பட வெற்றி விழா முடிந்த கையோடு உடனடியாக தளபதி விஜய்யும் கிளம்பி சென்றார். இதற்காக, நடிகர் விஜய், பி.எம்.டபிள்யூ காரில், சென்னை ஏர்போர்ட்டில் வந்திறங்கினார். அப்போது, சென்னை விமானநிலையத்திற்கு விஜய் வந்தபோது, இசட் பிளஸ் பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அழைத்து சென்றனர். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று விடிகாலையில், பாங்காக்கிலிருந்து சென்னை திரும்பினார் நடிகர் விஜய். அப்போது, விஜய்க்கு மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் பாதுகாப்பு அளிக்கவில்லை. ப்ளூ கலர் சட்டை, ப்ளூ கலர் மாஸ்க் அணிந்து வந்த விஜய்யை, பாதுகாப்பு போலீசார் பத்திரமாக, அவரது கார் வரை அழைத்து சென்றனர். தயாராக நின்று கொண்டிருந்த காரில் ஏறி விஜய் புறப்பட்டு சென்றார்.

இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருவதுடன், ஒரே வாரத்தில் விஜய்யின் "செக்யூரிட்டி" நிலைமையும் தலைகீழாக மாறியுள்ளதும் கவனம் பெற்று வருகிறது.

மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் மீது குற்றச்சாட்டு

சென்னை விமானநிலையத்தில் விஜய்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளித்த மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. விதிகளை மீறி நடந்ததாக மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகி பரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் கொண்டு சென்றனர். இதனையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு டெல்லியில் இருந்து சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

விஜய்யின் அரசியல் களப்பணி

இந்த நிலையில், சென்னை திரும்பிய விஜய், தனது அரசியல் களப்பணிகளை தொடங்கியுள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தினர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு இலவச புத்தகங்களை வழங்கினர். பின்னர், தேசத் தலைவர்கள் ஒவ்வொருவர் பிறந்த நாளை முன்னிட்டும் அவர்களது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். டியூசன் செண்டர், உணவகம் உள்ளிட்ட சேவைகளையும் செய்தனர். தற்போது 234 தொகுதிகளிலும் நூலகங்கள் ஏற்படுத்த திட்டம் வகுத்து வருகின்றனர்.

இந்த நிகழ்வுகளை சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். விஜய் விரைவில் அரசியலில் இறங்குவார் என்ற எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. இதன்காரணமாகவே அரசுக்கு விஜய் மீது எதிர்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்யின் 68வது படம்

விஜய்யின் 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். படத்தில் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. படம் 2024 ஆகஸ்ட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!