இயக்குநர் அட்லி இயக்கத்தில் மீண்டும் இணையும் நடிகர் விஜய்..!

இயக்குநர் அட்லி இயக்கத்தில் மீண்டும் இணையும் நடிகர் விஜய்..!
X
Vijay Actor New Movie- இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய்யுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளார். அப்படம் நடிகர் விஜய்யின் 68-வது படமாம்.

Vijay Actor New Movie- இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' என மூன்று படங்களில் நடிகர் விஜய் நாயகனாக நடித்தார்.

இந்த மூன்று படங்களுமே வசூலிலும் ரசிகர்களிடையேயான வரவேற்பிலும் கொண்டாட்டப் படங்களாகக் கொடியேற்றின. இந்தநிலையில், இந்த இருவரின் வெற்றிக் கூட்டணி நான்காவது முறையாக இணைந்து மீண்டுமொரு வெற்றிப் பட விருந்தளிக்கப் போவது உறுதியாகியுள்ளது.

நடிகர் விஜய், தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது படமான 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அடுத்து, விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவது உறுதியாகியுள்ளது.

இந்தநிலையில்தான், நடிகர் விஜய்யின் 68-வது படத்தை அட்லி இயக்குவார் என்பது உறுதியாகியுள்ளதாக கோலிவுட் பட்சிகள் கூட்டுக் குரல் கொடுக்கின்றன. அட்லி - விஜய் கூட்டணியின் அடுத்த படத்தை எதிர்பார்க்கும் நிலையில் இப்போது ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டக் குதூகலத்தில் இருக்கிறார்கள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!