'ஜவான்' இந்திப் படத்தில் ஷாருக்கானுடன் சிறப்புத் தோற்றத்தில் விஜய்..!

ஜவான் இந்திப் படத்தில் ஷாருக்கானுடன் சிறப்புத் தோற்றத்தில் விஜய்..!
X

பைல் படம்.

இயக்குநர் அட்லி இயக்கும் 'ஜவான்' இந்திப் படத்தில் ஷாருக்கானுடன் சிறப்புத் தோற்றத்தில் தோன்றுகிறார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம்தான் இப்படத்தின் டைட்டில் அவரது பிறந்தநாளன்று அமர்க்களமாக வெளியிடப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து வெளிவரப்போகும் விஜய் படம் இது.

இதனிடையே, இயக்குநர் அட்லி இந்தியில் முதன் முதலில் இயக்கும், 'ஜவான்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அட்லியுடனான நட்பு காரணமாக இந்தப் படத்தில் சம்பளம் எதுவும் வாங்காமல் விஜய் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே, இந்தப் படத்தின் படப்பிடிப்பு 60 சதவிகிதத்திற்கும் மேல் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில இந்தப் படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகளுக்காக சென்னையில் தற்போது பிரமாண்டமான அளவில் செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் சென்னையில் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் 'ஜவான்' படக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை, தமிழில் மட்டுமே கவனம் செலுத்திவந்த விஜய் 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் பாதம் பதிப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்றுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!