நயன் - விக்கி திருமணத்தில் மனைவியுடன் வாழ்த்திய நடிகர் விஜய் சேதுபதி..!

நயன் - விக்கி திருமணத்தில்  மனைவியுடன்   வாழ்த்திய நடிகர் விஜய் சேதுபதி..!
X
விஜய்சேதுபதி தனது மனைவியுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்துகொண்ட படத்தை விக்னேஷ் இன்ஸ்டாவில் பதிவிட்டார்.

நடிகை நயன்தாராவின் திருமணம் நடந்து முடிந்து ஒரு மாதம் ஆகிறது. எல்லாவற்றையும் திட்டமிட்டபடி செயல்படுத்தி வருபவர்கள் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்.

மாமல்லபுரத்தில் ஜூன் 9-ல் திருமணம். அடுத்தநாள், திருப்பதிக்கு பயணம். அங்கே வெங்கடாஜலபதி தரிசனம். தொடர்ந்து அங்கேயே ஒரு சின்ன போட்டோ ஷூட். அது சர்ச்சையாகிப் பிறகு தீர்வுக்கு வந்தது. அடுத்து, சென்னையில் பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் சந்திப்பு.

தொடர்ந்து தாய்லாந்துக்கு ஹனிமூன் பயணம். அதனை முடித்து, நேராக மும்பை திரும்பல். திருமணம் முடிந்து முதன்முதல் கலந்துகொள்ளும் படப்பிடிப்பாக ஷாருக்கான் ஜோடியாக 'ஜவான்' படப்பிடிப்பில் கலந்துகொண்டது என நீண்ட ஒரு மாதத்துக்குப் பிறகு,

விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணப் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி, நடிகர் விஜய் சேதுபதி தனது மனைவியுடன் திருமணத்துக்கு வந்து தங்களை வாழ்த்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். அதற்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஏராளமானோர் பின்னூட்டமிட்டு கொண்டாடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!