அரசியலுக்கு நாள் குறித்தார் நடிகர் விஜய்? துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்

அரசியலுக்கு நாள் குறித்தார் நடிகர் விஜய்?  துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்
X
உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கணிசமாக வெற்றி பெற்றிருப்பதால், நடிகர் விஜய்க்கு மீண்டும் அரசியல் ஆசை துளிர்த்திருக்கிறது. வரும் 2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அரசியல் பிரவேசம் இருக்கும் என்று, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. ஆளும் திமுக பெருவாரியான இடங்களில் வெற்றிக்கனியை ருசித்துள்ளது. அதே நேரம், நாம் தமிழர் கட்சி, கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் போன்றவற்றுக்கு இத்தேர்தல் முடிவு, பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

மாறாக, அரசியல் ஆசையுடன் சினிமாவில் பஞ்ச் டயலாக் பேசிவரும் நடிகர் விஜய்க்கு, இந்த உள்ளாட்சித் தேர்தல், ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது எனலாம். ஆம், நடந்து ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், ஒன்பது மாவட்டங்களில் 169 இடங்களில் விஜய் ரசிகர்கள் போட்டியிட்டனர். அவர்களில், கடைசியாக கிடைத்த தகவலின்படி, மாவட்ட வார்டு உறுப்பினர்கள் 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக, விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருக்கிறார். வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, மொத்தம் 110 பேர் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மக்களின் நாடித்துடிப்பை அறிய, ரசிகர்களை களமிறக்கி ஆழம் பார்த்த விஜய்க்கு, பாசிடிவ் முடிவு கிடைத்திருப்பது, பெரும் உற்சாகத்தையும், நம்பிக்கையும் தந்துள்ளது. எனவே, வரும் 2026 தமிழக சட்டப்பேரவையில் களமிறங்கலாம் என்ற முடிவுக்கு விஜய் வந்திருப்பதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே உள்ளாட்சித்தேர்தல் தந்த வெற்றியால் திக்குமுக்காடிப் போயிருக்கும் விஜய் ரசிகர்களுக்கு, இந்த தகவல், தேனில் நனைத்து தந்த பலா போல தித்திக்க வைத்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!