இயக்குனருக்கு நடிகர் விஜய் புதிய நிபந்தனை

இயக்குனருக்கு நடிகர் விஜய் புதிய நிபந்தனை
X

நடிகர் விஜய்

Actor Vijay News -படத்தில் நடிப்பது தொடர்பாக இயக்குனருக்கு நடிகர் விஜய் புதிய நிபந்தனைகள் விதித்துள்ளார்.

Actor Vijay News - இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக அட்லீ முதலில் சேர்ந்தார். நண்பன் , எந்திரன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர் அவரிடம் இருந்து விலகி "ராஜா ராணி " என்ற திரைப்படம் மூலம் இயக்குனராக அட்லீ அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இதனால் அவர் பிரபலம் ஆனார். சினிமாக படம் டைரக்ட் செய்ய வருவதற்கு முன்பே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் "முகப்புத்தகம்" என்னும் குறும்படத்தை அட்லீ இயக்கி உள்ளார் .

ராஜா ராணி படம் வெற்றி பெரிய நடிகர்களை இயக்கும் வாய்ப்பை அட்லீக்கு பெற்று தந்தது. இவர் நடிகர் விஜயின் தெறி திரைப்படத்தினை இயக்கினார். இந்த படமும் வெற்றி பெற்று வசூலை குவித்தது. தெறி திரைப்படத்திற்காக விஜய்க்கு சிறப்பு விருது கிடைத்தது. அடுத்து மீண்டும் நடிகர் விஜய் நடிப்பில் மெர்சல் படத்தை அட்லீ இயக்கினார். இந்த படமும் வெற்றி படமாக அமைந்தது. மீண்டும் விஜய்யுடன் இணைந்து பிகில் படத்தை இயக்கினார். இந்த படமும் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றது. அட்லீ நடிகர் விஜயின் தீவிர ரசிகர். அதனால் நடிகர் விஜய் இயக்குனர் அட்லீயிடம் ஒரு நண்பரை போல் பழக்கினார்.

இந்த நிலையில் தான் ஜவான் என்ற இந்தி படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் அட்லீக்கு கிடைத்தது. இதில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் நயன்தாரா, பிரியாமணி என பல முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். இது திரில்லர் மற்றும் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.விஜய் சேதுபதி ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார். 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படபிடிப்பு வடமாநிலங்களில் நடந்தது. அடுத்து சென்னையில் ஜவான் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

`ஜவான்' படத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அட்லீயின் அழைப்பை ஏற்று நடிகர் விஜய் நடிப்பதாக தெரிகிறது. தனக்கு வெற்றி படங்களை கொடுத்த அட்லீயின் விருப்பத்தை விஜய் ஏற்றுக்கொண்டு இந்த படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடி உண்டா? என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. இந்த படத்தில் நடிக்க விஜய் சில நிபந்தனைகளை இயக்குனர் அட்லீக்கு விதித்துள்ளார். இந்த படத்தில் மொத்தம் பத்து நாட்கள் மட்டுமே நடிக்க கால்ஷீட் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். சென்னையில் தான் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்றும், `ஜவான்' இந்தி படமாக இருந்தாலும் பெப்சி தொழிலாளர்களையும் படிப்பிடிப்பில் பங்கேற்க வைக்க வேண்டும், இரவு படபிடிப்பு வைக்கக் கூடாது உள்பட சில நிபந்தனைகளை அட்லீக்கு விஜய் விதித்துள்ளார். இந்த நிபந்தனைகளை இயக்குனர் அட்லீயும் ஏற்றக்கொண்டார். இதனால் விரைவில் நடிகர் விஜய் ஜவான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!