மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்க போகிறார் நடிகர் விஜய்

மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்க போகிறார் நடிகர் விஜய்
X
நடிகர் விஜய்.
vijay 68 update, thalapathy 68 atlee, thalapathy 68 producer, thalapathy 68 movieஇளைய தளபதி நடிகர் விஜய் மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இளைய தளபதி நடிகர் விஜய் மீண்டும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

vijay 68 update, thalapathy 68 atlee, thalapathy 68 producer, thalapathy 68 movieதமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரம் என அழைக்கப்படுபவர் இளைய தளபதி விஜய். விஜய்க்கு என தனி ரசிகர் வட்டாரம் உள்ளது. பொதுவாக அவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ஏ. பி. சி. என மூன்று தரப்பு சினிமா ரசிகர்களிடமும் அதிக வரவேற்பை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

vijay 68 update, thalapathy 68 atlee, thalapathy 68 producer, thalapathy 68 movieஇவர் தற்போது இயக்குனர் வம்சி டைரக்சனில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகவும் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளன. அனேகமாக வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijay 68 update, thalapathy 68 atlee, thalapathy 68 producer, thalapathy 68 movieஇந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் தனது 67வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பெயர் அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் தனது 67-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்பாகவே 68 வது திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி வருகிறது.

vijay 68 update, thalapathy 68 atlee, thalapathy 68 producer, thalapathy 68 movieவாரிசு திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் தெலுங்கு படம் ஒன்றில் விஜய் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. புஷ்பா உள்ளிட்ட பிளாக்பஸ்டர் திரைப்படங்களை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் விஜய்- அட்லி கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படத்தை தயாரிப்பதாக தெலுங்கு திரைப்பட உலக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!