அஜித் தந்தை மறைவு: நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

நடிகர் விஜய் (பைல் படம்)
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நடிகர் அஜித்குமாரின் தந்தை மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்.
உயிரிழந்த நடிகர் அஜித்குமாரின் தந்தை உடலுக்கு நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் மிர்ச்சி சிவா, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் தியாகராஜன் மற்றும் திரைத்துறையினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு அஜித்குமாரின் தந்தை உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவருக்கு இறுதிசடங்குகள் செய்யப்பட்டு, மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, தந்தையின் இறுதி ஊர்வலத்தை குடும்பநிகழ்வாக இருக்க கருதுகிறோம். இறுதி சடங்குகளை தனிப்பட்ட முறையில் நடந்த அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என நடிகர் அஜித்குமார் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த இறுதி ஊர்வலத்தில் நடிகர் அஜித்குமாரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில், தந்தையை இழந்த நடிகர் அஜித்தின் வீட்டிற்கு நடிகர் விஜய் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்கு சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu