நடிப்பில் நானும் புலிதான்; நிரூபித்த நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்

நடிப்பில் நானும் புலிதான்; நிரூபித்த நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்
X

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் விஜய்

Actor Vijay Son - நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய குறும்படங்களில், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் பாராட்டு குவிகிறது.

Actor Vijay Son .- தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தில் விஜய்யுடன் இணைத்து ராஷ்மிகா முதல் முறையாக நடிக்கிறார்.மேலும் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


தந்தை விஜய், தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் சூழலில், அவரது மகன் ஜேசன் சஞ்சய், நானும் நடிப்பில் புலிதான் என சொல்வது போல் வைரலாகி வருகிறது, அவர் நடித்து இயக்கிய குறும்படங்கள்.


நடிகர் விஜய்யின் மூத்த மகன் ஜேசன் சஞ்சய். இவர் கனடாவின் சினிமா சம்மந்தமான படிப்பை இந்த ஆண்டு படித்து முடித்துள்ளார். அவர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு நிகழ்வின் புகைப்படங்கள் சமீபத்தில், வெளிவந்தது.

தந்தையை போல் தானும் சினிமாவில் ஆர்வம் காட்டி வரும் சஞ்சய் சில ஆண்டுகளுக்கு முன் 'ஜங்ஷன்' மற்றும் 'SIR' என இரு ஷார்ட் பிலிம்களை இயக்கி, தனது நண்பர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.


சுமார் ஏழு நிமிடங்கள் ஓடும் 'ஜங்ஷன்' படத்திலும், நான்கரை நிமிடங்கள் ஓடும் 'சார்' படத்திலும், வெகு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருக்கிறார் ஜேசன் சஞ்சய் விஜய். இந்த படங்களை இயக்கிய விதத்திலும், தன்னை கைதேர்ந்த ஒரு கலைஞனாகவும் சிறுவயதிலேயே நிரூபித்திருக்கிறார். விஜய் ரசிகர்கள் பலரும், ஜூனியர் விஜய் ஆக கலக்கி வரும் ஜேசன் சஞ்சய் இயக்கிய குறும்படங்களை ஆர்வமாக பார்த்து, வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!