நடிகர் வடிவேலு படத்தின் பெயர் திடீர் மாற்றம்; காரணம் இதுதான்!

நடிகர் வடிவேலு படத்தின் பெயர் திடீர் மாற்றம்; காரணம் இதுதான்!
X

வடிவேலு

நடிகர் வடிவேலுவின் “நாய் சேகர்|” படத்திற்கு “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காமெடி நடிகர் வடிவேலு, நீண்ட வனவாசத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கிறார். அதனால் தான் என்னவோ, ஆரம்பமே அதகளமாக இருக்கிறது. பிரம்மாண்ட, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் வடிவேலு ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில், இப்படத்திற்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இதில், படத்தின் பெயர் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முன்னதாக, 'நாய் சேகர்' என்ற டைட்டில் வைக்க முடிவாகி இருந்தது.

ஆனால், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சதீஷ் நடிக்கும் படத்திற்கு 'நாய் சேகர்' என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்ததால், வடிவேலுவின் படத்திற்கு 'சேகர் ரிட்டன்ஸ்' என்று, பெயரில் சிறு மாற்றம் செய்ய வேண்டியதாயிற்று.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்