நடிகர் சூர்யா - நடிகை ஜோதிகா நடிப்பில் கில்லி… மகள் தியா படிப்பில் கில்லி..!

Diya Surya Daughter - தமிழ்த்திரையுலகில் ரசிகர்கள் தங்களது அபிமான நடிகர் மற்றும் நடிகைகளின் படங்களைக் கொண்டாடுவது போலவே, அவர்களது குடும்ப மகிழ்வையும் தங்கள் வீட்டு மகிழ்வாகவே கொண்டாடிக் களிப்பார்கள்.
அண்மையில் வெளியாகி சாதனை ஓட்டத்தில் சாதித்துக்கொண்டிருக்கும் 'விக்ரம்' படத்தில் நடிகர் சூர்யா தோன்றும் சில நிமிடக் காட்சிகளின்போது சூர்யாவின் ரசிகர்கள் கைத்தட்டலும் விசில் சத்தமுமாக தியேட்டரை அதிரவைக்கிறார்கள்.
இந்தநிலையில், நடிகர் சூர்யாவும் அவரது மனைவியான நடிகை ஜோதிகாவும் நடிப்பில் கில்லி என்றால், அவர்களது மகளான தியா படிப்பில் கில்லியாக உள்ளார். ஆம். பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தியா பத்தாம் வகுப்பில் வியக்கத் தகுந்த மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்கள்… தமிழ் – 95, ஆங்கிலம் – 99, கணிதம் – 100, அறிவியல் – 98, சமூக அறிவியல் – 95. தியா தேர்ச்சி குறித்து சூர்யா-ஜோதிகா ரசிகர்கள் சமூகவலைத் தளங்களில் பாராட்டுமழை பொழிந்து வருகிறார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu