நடிகர் சூர்யா ஆஸ்கர் அகாடமியின் அழைப்பை ஏற்றார்..!

நடிகர் சூர்யா ஆஸ்கர் அகாடமியின் அழைப்பை ஏற்றார்..!
X

நடிகர் சூர்யா.

Actor Surya News - நடிகர் சூர்யா ஆஸ்கர் அகாடமியின் அழைப்பை ஏற்றதோடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Actor Surya News -தென்னிந்திய நடிகர்களில் முதல் தமிழ் நடிகராக ஆஸ்கர் அகாடமி தேர்வுக்குழுவில் நடிகர் சூர்யா தேர்வானார். இந்த மகிழ்வைப் பாராட்டி முக்கியப் பிரபலங்கள் நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், நேற்று இரவு (29/06/2022) நடிகர் சூர்யா ஆஸ்கர் அகாடமியின் அழைப்பை ஏற்பதாக ட்வீட் செய்து இருக்கிறார். அவர் அந்த ட்வீட்டில், "எனக்கு இந்த அழைப்பை கொடுத்த அகாடமிக்கு நன்றி. இதை நான் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றி. உங்கள் அனைவரையும் எப்போதும் பெருமை கொள்ளச் செய்வேன்" என்று பதிவிட்டுள்ளார்.

அத்துடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு ட்விட்டரில் பதிலளித்து நன்றி தெரிவித்த சூர்யா, அந்த ட்விட்டர் பதிவில், "தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு, பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறேன். தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள்" என்று மகிழ்வான பதிலில் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!