தேசிய விருதுடன் நடிகர் சூர்யா ட்விட்டர் பதிவு..!

தேசிய விருதுடன் நடிகர் சூர்யா ட்விட்டர் பதிவு..!
X

பைல் படம்

நடிகர் சூர்யா டெல்லியில் நடந்த தேசிய திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்றதை ட்விட்டரில் பகிர்ந்தார்.

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நேற்று(30/09/2022) டெல்லியில் நடந்தது. ஜனாதிபதி திரௌபதி முர்மு பல திரைப்பட நடிகர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

நடிகர் சூர்யா,'சூரரைப் போற்று படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது பெற்றார். சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்கிய பின் பேசிய நடிகர் சூர்யா "எப்பவுமே என் மனைவியோட முடிவு சரியாகவே இருக்கும். எப்போ நான் குழப்பமடைந்து இருந்தாலும், ஒரு ஸ்கிரிப்ட்டை பார்த்த உடனே, அது சரியா இருக்குமா இல்லையா என்பதை ஜோ சொல்லிருக்காங்க. இது பலமுறை நடந்திருக்கு. 'காக்க காக்க', 'பேரழகன்' என பல படங்கள் அவ்வாறு நடந்திருக்கின்றன.

'சூரரைப் போற்று' படமும் அவ்வாறு நடந்ததுதான் .கதையைக் கேட்டவுடன், இதை கண்டிப்பா பண்ணலாம்னு சொல்லி, அந்த கதைக்குள் நான் செல்வதற்கு முன் ஜோவோட மனசும் இதுல இருந்துச்சு. தேசிய விருதை வாங்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது'' என மகிழ்வோடு தெரிவித்து உள்ளார்.

மேலும் தற்பொழுது நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில், தேசிய விருதை வாங்கிய பின்னர் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது .அதில் நடிகர் சிவகுமார் மற்றும் சூர்யாவின் அம்மா ,சூர்யா ஜோதிகாவின் மகன் மகள்கள் விருதுடன் எடுத்துக் கொண்ட போட்டோஸ் தற்பொழுது வைரலாகி உள்ளது .

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!