/* */

தந்தையின் பிறந்தநாளை சிறப்பாக்கி மகிழ்ந்த சினேகா..!

நடிகை சினேகா தனது தந்தை ராஜாராமின் பிறந்தநாளை, வித்தியாசமாகக் கொண்டாடி, தந்தையை நெகிழ்த்தி மகிழ்வித்துள்ளார்.

HIGHLIGHTS

தந்தையின் பிறந்தநாளை சிறப்பாக்கி மகிழ்ந்த சினேகா..!
X

தந்தை மற்றும் சிறப்பு பள்ளி குழந்தைகளுடன் நடிகை சினேகா.

தமிழ்த் திரையுலகில் புன்னகை அரசி என்றாலே, அது கே.ஆர்.விஜயாவை மட்டுமே குறிக்கும். அதேபோல்தான், புன்னகை இளவரசி என்றாலே, அது நடிகை சினேகாவைத்தான் அடையாளம் காட்டும்.

தமிழ் மட்டுமின்றி, பிற மொழிப் படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தபோதே நடிகை சினேகா, நடிகர் பிரசன்னாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பின், அழகும் அன்பும் நிறைந்த இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இனிய இல்லறம் நடத்தி வருகிறார். அதேசமயம் தற்போதும் குறிப்பிடும்படியான கதையம்சம் கொண்ட படங்களில் அவ்வப்போது நடித்தும் வருகிறார் சினேகா.

இந்தநிலையில், இன்று(ஜூலை 30) சினேகாவின் தந்தை ராஜாராமின் 70வது பிறந்தநாளை, தனது தந்தையே ஆச்சர்யப்படும் விதத்தில் ஏதேனும் செய்து கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டார் சினேகா. அதன்படி, சென்னை ரெட்ஹில்ஸில் உள்ள ஷெல்ட்டர் ஹோமுக்கு தனது தந்தையை அழைத்துச் சென்ற சினேகா, அங்கிருந்த சிறப்புக் குழந்தைகளுடன் சேர்ந்து தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதை எதிர்பாராத சினேகாவின் தந்தை ராஜாராம் இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்.

இந்நிகழ்வின்போது அந்த இல்லத்தில் இருந்த குழந்தைகளின் வாழ்த்துகளுடன் கேக்கை வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் சினேகாவின் தந்தை ராஜாராம். மேலும், அதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கு மதியம் சுவையான பிரியாணி விருந்தளித்தும் அவர்களை மகிழ்வித்துள்ளனர். தாத்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சினேகாவின் மகன் விஹானும், மகள் ஆத்யந்தாவும் கூட கலந்துகொண்டனர். இவர்கள் இருவரும் அங்கிருந்த குழந்தைகளுக்கு தங்களது கைகளால் உணவு பரிமாறியதுடன், அவர்களுக்குப் பரிசாக புத்தகங்களும் வழங்கினர்.

'இவள் தந்தை எந்நோற்றான்கொள் எனும் சொல்' என்று புதுமறை படைத்த சினேகாவின் செயலை எண்ணியெண்ணி மகிழ்வும் நெகிழ்வும் கொள்கிறார் ராஜாராம்.

Updated On: 31 July 2022 1:30 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  4. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  5. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...