சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை

சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை
X

நடிகர் சிவகார்த்திகேயன், உக்ரைன் நடிகை மரியா ரியாபோஷாப்கா

சிவகார்த்திகேயன் நடிக்கும் 20-வது படத்தில், அவருக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். மேலும் ரவிகுமார் இயக்கத்தில் அவர் நடிக்கும் அயலான் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

தற்போது தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'ஜதிரத்னலு' படத்தின் இயக்குநர் அனுதீப் கே.வி. இயக்கத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமானார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 10 காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகையான மரியா ரியாபோஷாப்கா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் 2018-ஆம் ஆண்டு வெளியான 'எடெர்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'ஸ்பெஷல் ஆப்ஸ்' என்ற இந்தி வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு இவர் ஜோடியாக நடிப்பது குறித்து அதிகாரபூர்வ தகவலை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!