எனது படம் ஒடிடியில் வெளியாகமால் தியேட்டரில் வெளியாவதில் சந்தோஷம்: சிவகார்த்திகேயன்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் சிவகார்த்திகேயன்.
கோவை பந்தயசாலை பகுதியில் கார்ட்டுனிஸ்ட் மதியின் இணையதள துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "பல வருடங்களாக நாம் பார்த்து ரசித்த கார்ட்டூன்களை வரைந்தவர் மதி. விழிப்புணர்வு மற்றும் கருத்துக்களை கார்ட்டூன் மூலம் உலகிற்கு சொல்வது தான் அவரது ஐடியா. ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் பத்திரமாக பார்க்கும் நிலை வரக்கூடாது. குடிக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது வணிகம் தான். அது பெரிய வணிகமாக கூடாது.
டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவது தயாரிப்பாளர் எடுத்த முடிவு. தியேட்டரில் படம் வர வேண்டும் என்பது தான் எனது ஆசை. தியேட்டரில் படம் பார்த்து வளர்ந்த ஆள் நான். காலச்சூழலில் எனது ஐடியாவை மட்டும் திணிக்க முடியாது. எது சரியாக இருக்கிறதோ அதை செய்யுங்கள் என தயாரிப்பாளரிடம் சொல்லியிருந்தேன். தியேட்டர் திறந்ததால், தியேட்டரில் படம் வருவது சந்தோஷம்.
தியேட்டரில் படம் பார்ப்பது ஒரு கொண்டாட்டம். எனது படம் ஒடிடியில் வெளியாகமால் திரையரங்குகளில் வெளியாவது சந்தோஷம். படத்தை வெளியிடுவது குறித்து நடிகர்கள் சேர்ந்து முடிவு எடுக்க முடியாது. படம் வெளியே வருவது கஷ்டமாக இருந்தது. தற்போது வெளியே வரும் படங்களை வியாபாரம் செய்வது கஷ்டமாக உள்ளது. படம் ரீலிஸ் ஆனால் தான் அதை நம்பியுள்ளவர்கள் வேலை நடக்கும்.
நாய்சேகர் படம் சூட்டிங் முடிந்து ரெடியாகி விட்டது. நடிகர் வடிவேலிடம் சதீஷ் பேசியுள்ளார். வேறு டைடில் வைப்பதாக வடிவேல் சொல்லியுள்ளார். அந்த டைடிலை வைத்து படம் முழுக்க எடுத்துள்ளனர். சதீஷ் ஹீரோவாக நடிப்பதால் பெரிய டைடில் தேவைப்படுகிறது. வடிவேலுக்கு அது தேவைப்படாது. எந்த டைடில் வைத்தாலும் பயங்கரமாக தான் இருக்கும். தமிழில் படத்தின் டைடில் வைப்பது நல்லது. நானும் தமிழில் டைடில் வைக்க சொல்கிறேன். ஆனால் ஒடிடியில் படம் வெளியாவதால் எல்லா மொழிகளிலும் வெளியிட எளிதாக உள்ளது" என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu