நடிகர் சித்தார்த் தன்னுடைய கடைசி முயற்சியாக சொந்த படம் தயாரிக்க முடிவு

ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சித்தார்த், பின்னர் தெலுங்கில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து தனக்கென தனி இடத்தை உருவாக்கினார். அவ்வப்போது தமிழ் படங்களிலும் தலைக்காட்டி வந்தார். இவர் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த படங்கள் தான் பின்னர் தமிழில் சம்திங் சம்திங் எனவும் சந்தோஷ் சுப்பிரமணியம் எனவும் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்துச்சு. ஆனால் சில காலங்களா இவர் நடிச்ச தெலுங்கு படங்கள ஓடாம ஊத்திக்கிட்ட நிலையில் மீண்டும் தமிழில் முயற்சித்தார்.
ஆனால் தமிழிலும் பெரிய வெற்றி படங்கள் அமையல, இந்நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வழக்கப்படி சொந்த படம் தயாரிக்க முடிவு செய்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண் குமாரை தன் படத்தை இயக்க ஒப்பந்தம் செஞ்சிருக்கார் சித்தார்த்.
அருண் குமார் விஜய் சேதுபதியுடன் இணைந்து சேதுபதி மற்றும் சிந்துபாத் என மூன்று படங்களில் பணியாற்றியுள்ளார். நீண்ட நாட்களாக வெற்றிக்காக காத்திருக்கும் சித்தார்த், இந்த படம் எப்படியாவது வெற்றியடைய வேண்டும். இல்லையேல் ரசிகர்கள் என்னை மறந்துடுவாய்ங்க அப்ப்டீன்னு சொல்லி சொல்லியே டைரக்டர் அருண் குமாருக்கு அழுத்தமும் கொடுத்து வந்துக்கொண்டிருக்கிறாராம். கடைசி முயற்சியாக இதில் இறங்கியுள்ள சித்தார்த் வெற்றி அடைவாரா? என்பதை பொருத்து தான் பார்க்க வேண்டும்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu