பாடகராக அவதாரம் எடுக்கும் நடிகர் சந்தானம்
சந்தானத்தின் கிக் திரைப்படம்
Actor Santhanam -நடிகர் சந்தானம் தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகராக தனது கலைப்பயணத்தைத் தொடங்கியவர். ஆரம்பகாலத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர், ஒரு கட்டத்தில், 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற திரைப்படத்தை தயாரித்து, அதில் மூன்று நாயகர்களில் ஒருவராக நடிக்கவும் செய்தார்.
அதன்பிறகு, 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்த சந்தானம், தற்போது பதினைந்தாவது படமாக, 'கிக்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
'கிக்' திரைப்படத்தின் முதல் பாடலான 'சாட்டர்டே இஸ் கம்மிங்கு' அக்டோபர் 10-ம் தேதி மாலை வெளியானது. இந்தப் பாடலை நடிகர் சந்தானம் பாடியுள்ளார். இதன் மூலம் சந்தானம் பாடகராகவும் புதிய களத்தில் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"சாட்டர்டே இஸ் கம்மிங்கு…" (Saturday is cominguu) பாடலை கவிஞர் விவேகா எழுதியிருக்கிறார். எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போக்கும் படமாக, சந்தானத்தின் "கிக்" இருக்கும். நமக்கு இருக்கும் கஷ்டம், துக்கம், வறுமை, ஏழ்மை, சோகம்னு எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமா பொழுது போகணும்.அப்படி நினைத்து எடுக்கப்பட்டுள்ளதுதான் இந்த 'கிக்' படம்.
இயக்குநர் பிரசாந்த் ராஜ் கன்னடப் பட உலகில், பல ஹிட் படங்களைக் கொடுத்துவிட்டு இப்படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார். படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் டாம்-ஜெர்ரி மாதிரிதான் . விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிற சந்தானம் எப்படியாவது கொஞ்சம் குறுக்கு வழியில் போய்க்கூட வெற்றியை அடையத் துடிக்கிறவர். 'தாராள பிரபு' நாயகியான தான்யா ஹோப், நேர்மையாய் விளம்பரத் துறையில் முன்னேறத் துடிக்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இரண்டு பேரும் எலியும் பூனையுமாக மோதிக் கொள்வதுதான் கதை. நடிகர் சந்தானத்தை விரும்பிப் பார்ப்பவர்களுக்கான படமாக இது இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர். எமோஷன், சென்டிமென்ட், டிராமா எல்லாம் கலந்து இருக்கிற ஜனரஞ்சகமான இப்படத்தில், தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, ஒய்.ஜி.மகேந்திரா, மொட்டை ராஜேந்திரன், ஷகிலா, ராகிணி திவேதி, வையாபுரி, சிசர் மனோகர், கிங்காங், முத்துக்காளை, சேஷு, கூல் சுரேஷ், அந்தோணி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள்ளது.
கன்னடத்தில் பிரபலமான இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யாவின் இசையில், படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களும் முற்றிலும் புதிய இசையில் அமைந்துள்ளது. மேலும், தமிழ்ப் படம் என்றதும் கூடுதல் மகிழ்ச்சியாகப் பண்ணியிருக்கிறாராம். அதற்கு காரணம், தமிழிலும் ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும், முத்திரையை பதிக்க வேண்டும் என்பதுதான் அவர் எண்ணமாம்.
நடிகர் சந்தானத்தின் நகைச்சுவைக் காட்சிகளை இன்றளவும் ரசித்துவரும் அவரது ரசிகர்கள், அவரை கதாநாயகனாகவும் கொண்டாடினர். 'கிக்' படத்தில் பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ள சந்தானத்தை வரவேற்றுள்ள அவரது ரசிகர்கள் படத்தின் வரவை ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu