காலணி அணிந்த கால்களுடன் கோயிலுக்குள் நடிகர் ரன்பீர் கபூர்..?! வெடித்த சர்ச்சை

பைல் படம்.
Today Tamil Cinema News in Tamil - திரைப்படக் காட்சிகளில் இடம்பெறும் ஒரு சில காட்சிகள் எதிர்பாராத விதமாக அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாவது உண்டு. மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் கிளம்பும் சர்ச்சைகள் இவற்றில் குறிப்பிடத்தக்கவைகளாகும்.
அவ்வகையில், தற்போது பாலிவுட் படவுலகின் முன்னணி நாயகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர் மீது இந்து மதத்தினர் கண்டனக் கணைகளை சமூக வலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர்.
விவகாரம் என்னவென்றால், அயன் முகர்ஜி இயக்கியுள்ள 'பிரம்மாஸ்திரா' படத்தின் டிரெய்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. டிரைலரில் இடம்பெற்ற காட்சி ஒன்றில் ரன்பீர் கபூர், காலணிகளுடன் துள்ளிக் குதித்து கோயில் மணியை அடிக்கிறார். இந்தக் காட்சி இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதாக உள்ளது என்பதுதான் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டுள்ள கண்டனக் கணைகள்.
இதுகுறித்து, இயக்குநர் அயன் முகர்ஜி அளித்துள்ள விளக்கத்தில், "ரன்பீர் கபூர் நாயகனாக நடித்துள்ள, 'பிரம்மாஸ்திரா' திரைப்படம், இந்திய கலாசாரத்திற்கு கௌரவம் சேர்க்கும் வகையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் பக்தன் என்ற முறையில் ஒன்றை உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். விவாதத்திற்குள்ளாகியிருக்கும் சம்பந்தப்பட்ட அந்தக் காட்சியில் ரன்பீர் கபூர், கோயிலுக்குள் நுழையவில்லை. அவர் துர்கா பூஜா பந்தலில்தான் நுழைகிறார்.
எங்கள் குடும்பம் கடந்த 75 ஆண்டுகளாகளுக்கும் மேலாக துர்கா பூஜைக்கு ஏற்பாடு செய்து வருகிறது. கடவுளின் சிலை இருக்கும் மேடையில் மட்டும்தான் காலணிகள் இல்லாமல் செல்வோம். பந்தலுக்குள் காலணிகளுடன் செல்லலாம்" என்று விளக்கமாகத் தெரிவித்து சர்ச்சை எழுந்துள்ள விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைந்துள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu