நடிகர் ராமராஜன் உடல் நிலை குறித்த வதந்தி உண்மையா?
நடிகர் ராமராஜன்
தமிழ் திரையுலகில், ஒருகாலத்தில் கொடிக்கட்டி பறந்தவர், நடிகர் (கி)ராமராஜன்; 1980 - 90களில், கிராமத்து கதைகளை தேர்வு செய்து, பல ஹிட் படங்களை வரிசையாக கொடுத்தவர். இவரது திரைப்பயணத்தில் திருப்புமுனையை தந்தது, கரகாட்டக்காரன் படம். ஆனால், உச்சத்தை தொட்ட அதே வேகத்தில், சரிவையும் சந்தித்தார். அதன் பின்னர், அவரால் மீள முடியவில்லை.
நடிகர் ராமராஜனின் அரசியல் பயணமும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. எம்.பி. ஆனார் என்பதை தவிர, அங்கும் அவருக்கு எதிர்பார்த்த முக்கியத்துவம் கிடைக்கவில்லை. சமீபகாலமாக சத்தம் இல்லாமல் ராமராஜன் ஒதுங்கி இருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் ராமராஜனுக்கு உடல் நிலை சரியில்லை என்று, சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. சிறுநீரக செயலிழப்பால் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், அவரது பி.ஆர்.ஓ. விஜயமுரளி இதை மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட தகவலில், நடிகர் ராமராஜன், முழு உடல் நலத்துடன் இருக்கிறார். யாரும் இந்த வதந்தியை நம்பவேண்டாம் உடல்நலத்துடனும் மனவலிமையுடனும் இருக்கிறார் என்றும் விரைவில் அவர் நடிக்கும் பட துவக்க விழாவில் கொள்வார்
திரைப்பட பணிகளை பொறுத்தவரை, இரண்டு படங்களுக்கு தனது கதையை தந்துள்ள ராமராஜன், அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu