திரையில் மறுபிரவேசம் எடுத்திருக்கும் நடிகர் ராமராஜன்..!

திரையில் மறுபிரவேசம் எடுத்திருக்கும் நடிகர் ராமராஜன்..!
X

நடிகர் ராமராஜனின் சாமானியனின் பட போஸ்டர்.

நடிகர் ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 'சாமானியன்' படத்தின் மூலம் நாயகனாக மீண்டும் திரையில் மறுபிரவேசம் செய்கிறார்.

இயக்குநர் மற்றும் நடிகர் ராமராஜன் தமிழ்த்திரையுலகில் தனக்கென தனிப்பாணி வகுத்து கிராமியப் பின்னணி கொண்ட பல வெற்றிப்படங்களை வெள்ளித்திரையில் வெளிச்சமிடவைத்தவர்.

தமிழ்த்திரையுலகில் 1990களில் கிராமத்து கதை கொண்ட படங்கள் என்றாலே, ராமராஜன்தான் பெயர்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகி இருக்கின்றன. அவரது 'கரகாட்டக்காரன்' படம் திரையரங்குகளில் ஆண்டுக் கணக்கில் ஓடிய வரலாறு உண்டு.

இந்நிலையில், நாயகனாக மட்டுமே நடித்து வந்த அவர் வாய்ப்புகள் இல்லாததால், ஒருகட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கியே இருந்தார். ஆனால், அவர் எப்போது மீண்டும் நடிக்க வருவார் என அவரது ரசிகர்களிடம் மட்டும் தினம்தினம் ஒரு எதிர்பார்ப்பு மட்டும் இருந்துகொண்டே வந்தது.

தற்போது நடிகர் ராமராஜன் 'சாமானியன்' என்கிற படத்தில் நாயகனாக நடிக்கவிருப்பதால் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற உள்ளது. இந்நிலையில் தற்போது, நடிகர் ராமராஜன் நடிக்கும் 'சாமானியன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் விஜய் சேதுபதிதான் 'சாமானியன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த போஸ்டரில், ராமராஜனுடன் ராதாரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் உள்ளனர். மொத்தம் 5 மொழிகளில் இந்தப் படம் வெளியாகப்போகது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!