இணையத்தை அதிர வைக்கும் நடிகர் ரஜினியின் ஜெய்லர் பட காவாலா பாடல்

இணையத்தை அதிர வைக்கும் நடிகர் ரஜினியின் ஜெய்லர் பட காவாலா பாடல்
X

ஜெய்லர் படத்தில் இடம்பெற்றுள்ள காவாலா பாடல் காட்சி.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள காவாலா பாடல் இணையதளத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கி உள்ள ஜெய்லர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகர்கள் மோகன்லால், சிவ் ராஜ்குமார், யோகி பாபு, நடிகைகள் ரம்யா கிருஷ்ணன் தமன்னா உள்பட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் இடம்பெற்றுள்ள கவாலா திரைப்பட பாடல் முதல் சிங்கிள் கடந்த 6 ஆம் தேதி வெளியாகியது. காவாலா பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே அதிக பார்வையாளர்கள் பார்த்தனர். காவாலா பாடல் தற்போது இணையதளத்தை முழுவதுமாக ஆக்கிரமித்து உள்ளது என்றே கூறலாம்.

youtube -இல் கிட்டத்தட்ட 17 மில்லியன் பார்வையாளர்கள் காவலா பாடலை பார்த்து உள்ளனர். மேலும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் 13 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து உள்ளனர். அதுமட்டுமின்றி ஆடியோவுக்கான பிரத்தியேக தளமான ஸ்பாட்டிபை தளத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் நடிகர் விஜய் நடித்துவரும் லியோ படத்தில் இடம் பெற்றுள்ள நான் ரெடியா என விஜய் பாடி உள்ள பாடல் வெளியாகி இணையதளத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்தது.

அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் திரைப்படத்தில் அனிருத் இசையமைப்பில் இடம் உள்ள காவலா பாடல் தற்போது இணையத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. அடுத்தடுத்து ஜெய்லர் பட பாடல்கள் வெளியாகும் என்றும் படத்தின் டீசர் வெளியாகும் போது மேலும் பல்வேறு சாதனைகளை புரியும் என்று இணையதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

Tags

Next Story
future of ai in next 5 years