அண்ணனின் 80-வது பிறந்த நாள் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தங்க காசு அபிஷேகம்

அண்ணனின் 80-வது பிறந்த நாள் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தங்க காசு அபிஷேகம்
X

நடிகர் ரஜினிகாந்த் தனது அண்ணன் சத்யநாராயணாவிற்கு தலையில் தங்க காசுகளால் அபிஷேகம் செய்த காட்சி.

தனது அண்ணனின் 80-வது பிறந்த நாள் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று அவரை வாழ்த்தி உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது அண்ணன் சத்திய நாராயணாவின் 80வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று வாழ்த்தி உள்ளார்.

தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்து வருகிறது. அங்கு முகாமிட்டு நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு காட்சிகளில் நடித்து வருகிறார்.

நேற்று மகா சிவராத்திரி விழா என்பதால் நடிகர் ரஜினிகாந்த் அங்கிருந்து பெங்களூருவுக்கு சென்றார். அங்கு வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்தி வரும் ஆசிரமத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் அவர் பங்கேற்று விடிய விடிய விழித்திருந்து பூஜைகளில் கலந்து கொண்டார். இதில் அவரது மனைவி லதாவும் பங்கேற்று உள்ளார். இருவரும் ஒன்றாக அமர்ந்து தியானம் செய்வது போன்ற படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆக பரவி வருகிறது.


அதன் பின்னர் ரஜினிகாந்த் தனது அண்ணன் சத்திய நாராயணாவின் 80வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று அவரை வாழ்த்தி உள்ளார். அவருக்கு ரஜனிகாந்த் தங்க காசுகாளால் அபிஷேகம் செய்வது போன்ற புகைப்படங்களும் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் தனது அண்ணன் சத்திய நாராயணா மீது மிகுந்த பாசம் மற்றும் மரியாதை வைத்திருக்கிறார். கடந்த காலங்களில் அவர் தனது அண்ணன் சத்ய நாராயணா தனது பெற்றோருக்கு இணையாக தன்னை வளர்த்ததாக பாராட்டி இருக்கிறார். அந்த வகையில் தற்போது அவரது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யநாராயணா கர்நாடக மாநிலத்தில் மாநில அரசின் சுகாதாரத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் தீவிரமாக இறங்க முயற்சித்த போது சத்ய நாராயணா அடிக்கடி அவருடைய அரசியல் எண்ணங்கள் பற்றி பேட்டி அளித்து வந்தார். எப்படியும் அவர் அரசியலுக்கு வருவார் என்றெல்லாம் கூறி வந்தார். அதற்கேற்றார் போல் ரஜினி காந்தும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக பரபரப்பு பேட்டி அளித்து வந்தார். ஆனால் அதன் பின்னர் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ரஜினி அரசியலில் இறங்கும் முடிவை திடீர் என கைவிட்டார்.

ரஜினி காந்த் தனது அரசியல் பயண முடிவை கைவிட்ட பின்னர் சத்யநாராயணாவும் அது பற்றி எதுவும் கூறுவதில்லை. அமைதியாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவரது 80வது பிறந்த நாள் விழாவில் தான் அவரை பற்றிய செய்திகள் தற்போது வெளி வந்து உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!