நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகன்... வருகிறது 'சந்திரமுகி-2'..!

டைரக்டர் வாசு, நடிகர் ராகவா லாரான்ஸ், வடிவேலு.
Raghava Lawrence Latest Movie - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளிவந்து வெள்ளித்திரையின் வெற்றிப்படமாக ஹிட்டடித்த படம் 'சந்திரமுகி'. பிரபு, ஜோதிகா, வடிவேலு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இப்படத்தை பி.வாசு இயக்கியிருந்தார்.ரஜினி, வடிவேலு சம்பந்தப்பட்ட நகைச்சுவைக் காட்சிகள் எவர்கிரீன் காட்சிகளாக இப்போதும் ரசிகர்கள் மத்தியில் நிலைகொண்டுள்ளது.
பழைய அரண்மனை ஒன்றிற்குள் நுழையும் ஒரு குடும்பத்திற்கு அந்த அரண்மனையில் வாழ்ந்து இறந்த 'சந்திரமுகி' என்ற நாட்டியக்காரியின் ஆவி ஜோதிகா மூலம் தன் ஆசையை எப்படியெல்லாம் நிறைவேற்றிக் கொள்கிறது என்கிற ஒரு வரிக்கதையை நகைச்சுவை மற்றும் கமர்ஷியல் கலந்து கொண்டாட்ட சினிமாவாகக் கொடுத்திருப்பார் இயக்குநர் பி.வாசு.
அப்படத்தின் இரண்டாம் பாகமான 'சந்திரமுகி-2' இப்போது தயாராகவிருக்கிறது. இயக்குநர் பி.வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, வடிவேலு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. 'சந்திரமுகி' முதல் பாகத்தை ரசிகர்கள் எப்படி எதிர்பார்த்தார்களோ, அதே எதிர்பார்ப்பு தற்போது இரண்டாம் பாகத்துக்கும் எழுந்திருக்கிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu