Bigg Boss 6 Contestants Salary Tamil-'பிக்பாஸ் -6' சீசன் நடிகர், நடிகைகளின் தினசரி சம்பளம் எவ்வளவு தெரியுமா?

உலகநாயகன் நடிகர் கமல்ஹாசனின் தமிழ் பிக் பாஸ் ஆறாவது சீசன் விஜய் தொலைக்காட்சியில் களைகட்டி வருகிறது. கடந்த ஒன்பதாம் தேதி பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்கியது. முதல் நாள் போட்டியாளர்களான 20 பேரை பிக் பாஸ் ஒருங்கிணைப்பாளர் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார்.தினமும் ஆரம்பமே களை கட்டும் வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் கமல்ஹாசனுக்கு ரூ. 75 கோடி வரை சம்பளம் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டுள்ள சக நடிகர் நடிகைகளுக்கு யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அது வருமாறு:-
யூடியுபர் ஜி.பி.முத்து ஒரு நாளைக்கு ரூ. 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை சம்பளம் வாங்குகிறார். நடிகை மைனா நந்தினி ரூ. 20000 முதல் ரூ.25 ஆயிரம் வரையும், நடிகை சிவின் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரையும், அசல் கோளாறு ரூ.15 ஆயிரம் முதல்ரூ. 17,000 வரையும், அசிம் ரூ 22 ஆயிரம் முதல்ரூ. 25 ஆயிரம் வரையும், ராபர்ட் மாஸ்டர் ரூ. 25 ஆயிரம் முதல் 27 ஆயிரம் வரையும், தனலட்சுமிரூ. 11 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும், நிவா ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 18 ஆயிரம் வரையும், குயின்சி ரூ. 15000 முதல் 20 ஆயிரம் வரையும், வி.ஜே. கதிரவன் ரூ. 18000 முதல் ரூ. 22 ஆயிரம் வரையும், மகேஸ்வரிரூ. 18000 முதல்ரூ. 23 ஆயிரம் வரையும் அமுதவாணன் ரூ. 23 ஆயிரம் முதல் 27 ஆயிரம் வரையும், விக்ரமன் ரூ. 15,000 முதல் 17 ஆயிரம் வரையும், சாந்தி ரூ. 21 ஆயிரம் முதல் 26 ஆயிரம் வரையும் , ஜனனி ரூ.21 ஆயிரம் முதல் ரூ 26ஆயிரம் வரையும்,ஏ.டி.கே. ரூ. 16 ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரையும், ராம் ராமசாமி ரூ.12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையும், ரச்சிதா ரூ.25 ஆயிரம் முதல் 28 ஆயிரம் வரையும், மணிகண்டன் ரூ. 18 ஆயிரம் முதல்ரூ. 24 ஆயிரம் வரையும், செரினா ரூ. 23 ஆயிரம் முதல்ரூ. 25 ஆயிரம் வரையும், ஆயிஷா ரூ. 28 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரையும் சம்பளம் வாங்குகிறார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu