அட... இதுதான் காரணமா? பாலிவுட் பட வாய்ப்பை இழந்த விஜய் சேதுபதி

அட... இதுதான் காரணமா?  பாலிவுட் பட வாய்ப்பை இழந்த விஜய் சேதுபதி
X

நடிகர் விஜய் சேதுபதி

Vijay Sethupathi News- அமீர்கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' படத்தில், விஜய் சேதுபதி நடிக்க வேண்டிய கேரக்டரில், தான் நடித்துள்ளதாக நடிகர் நாக சைதன்யா கூறியுள்ளார்.

Vijay Sethupathi News- தமிழ் சினிமா ஹீரோக்களில் வித்தியாசமான நடிப்பில் ரசிகர்களை அசத்தி வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமின்றி, சவாலான கேரக்டர் என்றால், வில்லன் நடிப்பிலும் தன் திறமையை வெளிப்படுத்தும் நல்ல கலைஞனாக ரசிகர்களால் பாராட்டப்படுகிறார்.

வில்லன், குணச்சித்திர நடிகர், கெஸ்ட் ரோல் என எந்த கேரக்டர் என்றாலும், தயங்காமல் ஒத்துக்கொள்வதால், விஜய் சேதுபதியின் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளது. தமிழ் சினிமாவிலேயே 'பிஸி'யான ஹீரோவாக வலம் வரும் விஜய் சேதுபதி, பிற மொழி படங்களிலும், தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

பாலிவுட் சினிமாவில், முன்னணி நட்சத்திர நடிகரான அமீர் கானின் 'லால் சிங் சத்தா' படத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டிய நிலையில், அவருக்கு பதிலாக நாக சைதன்யா நடித்துள்ளார். கால்ஷீட் பிரச்னையால், இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க முடியவில்லை எனபதை படக்குழுவிடம் கூறி படத்திலிருந்து விலகினார். அதன் பின், விஜய் சேதுபதி நடிக்க வேண்டிய கேரக்டரில், நாக சைதன்யா, லால் சிங் சத்தா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

'லால் சிங் சத்தா' படத்தின் தமிழக உரிமையை உதயநிதி வாங்கியிருப்பது கூடுதல் தகவல்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!