நடிகர் மோகன் ஆக்சன் ஹீரோவாக அசத்தும் ஹரா' பட பர்ஸ்ட் லுக் டீசர் ரிலிஸ்

தமிழ்சினிமாவின் ரொமான்ஸ் ஹீரோவாக கலக்கியவர் மைக் மோகன்.. தமிழ் சினிமாவில் இன்றை சூழ்நிலையில் ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளிவருவதே சிரமமாக உள்ளது. அப்படி பல தடைகளை தாண்டி அப்படம் 10-நாட்கள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடப்படும் நிலை உள்ளது. ஆனால் 25-ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் இவரின் பெரும்பாலான படங்கள் 100-நாட்கள், 200-நாட்கள் என சா்வ சாதாரணமாக ஓடும். இப்படி பல திரைப்படங்கள் நிறைய நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளன.
அதிலும் இதுபோன்ற ஒரு சாதனையை தனது முதல் படத்திலேயே படைத்த பிரபல இயக்குநா் சுந்தா்ராஜ் அவா்களின் பயணங்கள் முடிவதில்லை படத்தில் நடித்த பிரபல நடிகராக்கும் இந்த மோகன்
அப்படி ஹீரோவாக அறிமுகமாகி முதல் மூன்று வருடங்களிலும் 300 நாட்கள் ஓடி சாதனை படைத்த மூன்று படங்களைக் கொடுத்த ஒரே ஹீரோ மோகன் மட்டுமே. 'பயணங்கள் முடிவதில்லை' படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் வென்று சாதித்தார் மோகன். அவர் வாங்கிய ஒரே பெரிய விருதும் இதுமட்டுமே என்கிறார்கள்.
மேலும் 1984-ஆம் ஆண்டு மட்டுமே கிட்டத்தட்ட 19 படங்கள் நடித்து யாரும் முறியடிக்காத சாதனையை படைத்தாராம். அபேர்ப்பட்ட மைக் மோகன் தமிழ் சினிமாவின் ரொமான்ஸ் ஹீரோவாக கலக்கியவர் . தற்போது நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். 'ஹரா' என்ற படத்தில் 'தாதா 87' படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீ இயக்கத்தில் நடிச்சு வருகிறார்.
நடிகை குஷ்பு இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மோகனுடன் குஷ்பு நடிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைஎஸ்.பி.மோகன்ராஜ் தயாரித்து வருகிறார். சில மாதங்களுக்கு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. மைக் மோகன் மீண்டும் நடிப்பில் களமிறங்கியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இதுவரை காதல் படங்களில் மட்டுமே நடித்து வந்த மோகன் தற்போது முழு ஆக்ஷன் படத்தில் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி பலரையும் கவர்ந்து வருது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu