பிக்பாஸ் ஆறாவது சீசன் வீட்டுக்குள் வருகிறார் நடிகர் மன்சூர் அலிகான்

பிக்பாஸ் ஆறாவது சீசன் வீட்டுக்குள் வருகிறார் நடிகர் மன்சூர் அலிகான்
X

bigg boss contestants tamil season 6 நடிகர் மன்சூர் அலிகான்.

Bigg Boss Tamil Contestants -பிக்பாஸ் ஆறாவது சீசனில் நடிகர் மன்சூர் அலிகான் பங்கேற்பார் என தகவல்கள் கசிய தொடங்கி உள்ளது.

Bigg Boss Tamil Contestants -உலகநாயகன் கமல்ஹாசன் இதுவரை 5 பிக் பாஸ் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்து விட்டார். அவர் நடத்தும் ஆறாவது பிக் பாஸ் சீசன் அக்டோபர் 9-ம் தேதியான வருகிற ஞாயிற்றுக்கிழமை விஜய் டி.வி.யில் மிகப் பிரமாண்டமாக தொடங்க இருக்கிறது. இதற்கான படப்பிடிப்புகள் வெள்ளிக்கிழமை முதல் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக பிக் பாஸ் வீட்டை மீடியாக்கள் சென்று பார்ப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

bigg boss contestants tamil season 6இந்த ஆறாவது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி செரினா, இலங்கை ஆங்கர் ஜனனி, திரைப்பட நடன இயக்குனர் ராபர்ட், விஜய் டி.வி. சீரியல் நடிகை ரக்சிதா, நடிகை விசித்ரா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த முறை பிக் பாஸ் சீசன் வீட்டை அலங்கரிக்க இவர்களது நடிப்பு முக்கியமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

இந்த நிலையில் விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜ் பயன்படுத்திய சக்கு சக்கு வத்திக்குச்சி பாடல் மீது மீண்டும் ட்ரெண்டானவர் நடிகர் மன்சூர் அலிகான். பிக் பாஸ் சீசன் 6-ல் அவரை போட்டியாளராக உள்ளே கொண்டுவர பிக் பாஸ் டீம் தீவிர முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


bigg boss contestants tamil season 6நடிகர் மன்சூர் அலிகான் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தால் காமெடிக்கும் டி.ஆர்.பி.க்கும் பஞ்சமே இருக்காது. ஏனென்றால் மன்சூர் அலிகானுக்கு முதலில் அவரது ரசிகர்கள் ஆர்மியை உருவாக்குவார்கள். சோசியல் மீடியாக்களிலும் கமெண்டுகள் போட்டு தாக்குவார்கள். கடந்த சில சீசன்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிசிக்கல் டாக்ஸ் எல்லாம் குறைவாக இருந்தன. போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்து அமர்ந்து கொண்டு மிக்சர் சாப்பிடுகின்றனர் என்று சக போட்டியாளர்களே விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டாவது பிக் பாஸ் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என பிக் பாஸ் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story