அழகிகளுடன் அதகளமாக போஸ் கொடுத்த நடிகர் கமல்ஹாசன்..!

அழகிகளுடன் அதகளமாக போஸ் கொடுத்த நடிகர் கமல்ஹாசன்..!
X

மாடல் அழகிகளுடன் கமல் ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் அழகிகளுடன் போஸ் கொடுத்து நடத்திய போட்டோஷூட்கள் வைரலாகி வருகிறது.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில், சகலகலாவல்லவனாக பல்வேறு மாயாஜாலங்களை நிகழ்த்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வரும் நடிகர் கமல்ஹாசன், திரைப்படங்கள் மட்டுமின்றி அரசியலிலும் தடம் பதித்து தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி சின்னத் திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமும் தனது இன்னொரு முகத்தைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில வருடங்களாக பெரிய வெற்றிப் படங்கள் கொடுக்காத நடிகர் கமல்ஹாசனுக்கு, கடந்த மார்ச் மாதம் வெளியான 'விக்ரம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், 'இந்தியன்-2' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, 'விக்ரம்' திரைப்படத்தின் வெற்றிவிழாவுடன் தனது 68வது பிறந்தநாளையும் இணைத்து மிக உற்சாகமாகக் கொண்டாடி முடித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

தற்போது, அரசியல், சினிமா, பிக் பாஸ் என மிகவும் பிஸியாக வலம் வருகிறார் உலகநாயகன் கமல்ஹாசன். 'இந்தியன்-2' திரைப் படத்தில் நடித்து வரும் கமல், 7ம் தேதி தனது 68வது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார்.

இந்தநிலையில், நடிகர் கமல்ஹாசனின் அண்மைக்கால போட்டோ ஷூட், பலரையும் வியக்க வைத்துள்ளது. தனது 'ஹவுஸ் ஆஃப் கதர்' காதி பிராண்டிற்காக, அண்மையில், போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். கடந்த ஆண்டு புது பிசினஸ் ஒன்றை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன். அது பொருளாதார ரீதியிலான பிசினஸாக மட்டும் இல்லாமல், கதர் ஆடை விற்பனையாளர்கள், நெசவுத் தொழிலாளர்கள் துயரத்தை போக்கும் விதமாக கதர் ஆடைகளுக்கு என பிரத்யேக பிராண்ட் ஒன்றை தொடங்கினார். இந்த கதர் பிராண்டை 2020-ல் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இறுதிநாளின் போது அறிமுகப்படுத்தினார் நடிகர் கமல்ஹாசன்.

சர்வதேச ஃபேஷன் டிசைனர்களை உள்ளடக்கிய இந்த நிறுவனம் கைத்தறி ஆடைகளை ஊக்குவிக்கும் எனவும் கமல்ஹாசன் அப்போது அறிவித்திருந்தார். அதன்படி, தற்போது கதர் ஆடை என்றாலே அது வயதானவர்களும் அரசியல்வாதிகளும் மட்டுமே விரும்புவார்கள் என்ற தோற்றத்தை கமல் மாற்றியுள்ளார். இளம் அழகிகளுடன் ஸ்டைலாக போட்டோ ஷூட் நடத்தி அதகளப்படுத்தியுள்ளார். கமல்ஹாசனின் இந்த போட்டோ ஷூட் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, இணையத்திலும் வைரலாகி வருகிறது.


கதர் ஆடைகளுடன் கமல்ஹாசன் நடத்திய போட்டோ ஷூட்டும் சமூக வலைத்தளம் முழுவதும் வைரலாகி வரும் நிலையில், அவரது அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 'இந்தியன்-2' திரைப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இன்னொரு படத்திலும் கமல்ஹாசன் நடிக்க கமிட் ஆகியுள்ளதாகவும், அதுகுறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், நடிகர் கமல்ஹாசனின் அண்மைக்கால புகைப்படங்களை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil