நடிகர் கமல்ஹாசனும் 'பொன்னியின் செல்வனி'ல் இணைந்தார்..!

நடிகர் கமல்ஹாசனும் பொன்னியின் செல்வனில் இணைந்தார்..!
X

நடிகர் கமலஹாசன்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கதில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' திரைக்காவியத்தில் நடிகர் கமல்ஹாசனும் இணைந்திருக்கிறார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் வரலாற்று திரைக்காவியம் 'பொன்னியின் செல்வன்'. இது, அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினமாகும். செப்டம்பர் 30-ல் படத்தின் முதல்பாகம் உலகம் முழுவதும் திரையை அலங்கரிக்க வருகிறது.

இந்தியத் திரைவானின் முன்னணி நட்சத்திரங்களாக மிளிரும் பல்வேறு நடிகர்கள், நடிகைகள், திரைக் கலைஞர்கள் இப்படத்தில் பங்கேற்கும் இந்தநிலையில், நடிகர் கமல்ஹாசனும் படத்தில் இணைந்துள்ளார்.

தமிழில் வெளியான பிரமாண்ட வரலாற்றுப் புதினங்களில் ஒன்றாக 'பொன்னியின் செல்வன்' இடம் பெறப்போகிறது. பத்தாம் நூற்றாண்டில் நடந்த ஒரு சாகசப் பயணம் இது. சோழப் பேரரசுக்குள் நடக்கும் பிரிவு, அதிகாரப் போராட்டங்கள் ஆகியவற்றைத் தாண்டி, எதிரிகள் சூழ்ச்சியுடன் செயல்படுவதை எதிர்கொண்டு பொன்னியின் செல்வன் ஒரு பொற்காலத்தைக் கொண்டு வருவதற்காகப் போராடுவதுதான் இந்தக் கதை.

வரலாற்றின் நெடிய பக்கங்களில் மறக்க இயலாத ஒன்றுதான், ராஜராஜ சோழன் வரலாறு. அவன், வரலாற்றில் மிகப்பெரிய பேரரசர்களில் ஒருவராக ஆவதற்கு முன்பு இருந்த கொந்தளிப்பான காலகட்டமே கதைக்களமாகும். பொன்னியின் செல்வனைப் புத்தகத்தில் மட்டுமே படித்தவர்கள், இந்தத் திரைப்படத்தைக் காண மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பதில் மிகையொன்றுமில்லை.

மிகப்பெரிய நாவலை சில மணி நேரப் படமாக்குவது என்பது இயலாத ஒன்றாகும். எனவேதான், பொன்னியின் செல்வன் கதையைக் குரல் மூலம் எடுத்துச் சொல்லி திரைக்கதையை நகர்த்திச் செல்லவேண்டும் என தீர்மானித்த மணிரத்னம், நடிகர் கமல்ஹாசனை அணுகியிருக்கிறார். அவரும் ஒப்புக்கொண்டு படம் நெடுக கதையைச் சொல்லியிருக்கிறாராம். இதற்கான குரல்பதிவை முடித்துக் கொடுத்துவிட்டாராம் கமல்ஹாசன்.

இதன்மூலம், நடிகர் கமல்ஹாசனும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்துவிட்டார். ஏற்கெனவே, கமல்ஹாசன், பொன்னியின் செல்வனை படமெடுக்க முயற்சித்து நிறுத்திவிட்டார் என்பதும் அவருக்கும் பொன்னியின் செல்வன் கனவுப்படம் எனபதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்