நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்
ஜூனியர் பாலையா.
தமிழ் திரையுலகின் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகன் ஜூனியர் பாலையா. இவரது இயற்பெயர் ரகு. இவர் சினிமாவுக்காக ஜூனியர் பாலையா என்று அறியப்பட்டவர். கடந்த 1975ம் ஆண்டு வெளியான ‘மேல்நாட்டு மருமகள்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இந்த படத்தை தொடர்ந்து கோபுர வாசலிலே, கரகாட்டக்காரன், சின்னத்தாயி, சங்கமம், வின்னர் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் நடித்து வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடைசியாக 2021ல் வெளியான ’என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. சினிமா தவிர்த்து ‘சித்தி’, ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ உள்ளிட்ட சீரியல்களிலும் ஜூனியர் பாலையா நடித்துள்ளார்.
இந்நிலையில், ஜூனியர் பாலையா இன்று அதிகாலை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இன்று மாலை அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூனியர் பாலையா மறைவுக்கு சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu