வெற்றிக் கணக்கைத் தொடங்கியிருக்கும் நடிகர் தனுஷின் 'நானே வருவேன்'

வெற்றிக் கணக்கைத் தொடங்கியிருக்கும் நடிகர் தனுஷின் நானே வருவேன்
X
நடிகர் தனுஷ் இரு வேடத்தில் நடித்துள்ள 'நானே வருவேன்' படம் இன்று வெளியாகி, ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் நாளை (30/09/2022) வெளியாகவிருக்கும் இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' மீதான எதிர்பார்ப்பு ஏராளமாக எகிற வைத்துக்கொண்டுள்ளது. இந்தநிலையில், இன்று(29/09/2022) உலகெங்கும் வெள்ளித்திரையில் வெளியாகியுள்ள இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்' குறித்து கடந்த நாட்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

ஆனாலும், வெற்றியைக் குவிக்கும் என்கிற நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இன்று தனுஷின் 'நானே வருவேன்' வெளியாகியது. இதுவரை படம் குறித்து வெளியாகி இருக்கும் விமர்சனங்களில் பெரும்பாலும் வரவேற்புக்குரியதாகவும் வெற்றிக் கணக்கை தனுஷ் தொடங்கிவிட்டார் என்கிற உறுதி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. படம் தமிழகம் முழுவதும் 650 திரைகளில் வெளியாகி இருக்கிறது. இன்றைய வசூல் சுமார் 10 முதல் 14 கோடி ரூபாய் வரை ஆகும் என்கிற எதிர்பார்ப்பு திரையரங்கு தரப்பிலிருந்து எழுகிறது.

எனவே, நாளை 700 திரைகளில் வெளியாகும் 'பொன்னியின் செல்வன்' படத்தால், 'நானே வருவேன்' படத்தின் வெற்றிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்ற நம்பிக்கை ஒளிர்கிறது என்கிறார்கள் திரைப்பட வர்த்தகர்கள். இந்தநிலையில், Naane varuven .. FROM TODAY என மூன்று ஹார்டீன்களை போட்டு நடிகர் தனுஷ் தற்போது ட்வீட் போட்டுள்ளார். படத்தைப் பார்த்த ரசிகர்கள், 'தலைவா வேறலெவல்ல மிரட்டிட்டீங்க' கொண்டாட்ட குதூகலத்தை கொட்டித் தீர்த்து வருகின்றனர். பிரபு மற்றும் கதிர் என இரு கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி இருக்கிறார் தனுஷ் என பாராட்டு மழை பொழிகின்றனர்.. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் கதையே தனுஷ் எழுதியதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 13 வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் தனுஷ் ஆகிய மூவரின் கூட்டணியில், 'நானே வருவேன்' உருவாகி வெளியாகி இருப்பதும் ரசிகர்களிடையே படைக்கப்பட்டிருக்கும் விருப்ப விருந்து இது என்கிறார்கள்.

Tags

Next Story
ai ethics in healthcare