டாப் கியரில் செல்லும் தனுஷ்... அடுத்தடுத்த பட அப்டேட்கள்.!

டாப் கியரில் செல்லும் தனுஷ்... அடுத்தடுத்த பட அப்டேட்கள்.!
X
தனுஷ் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதனிடையே அடுத்தடுத்து 2 படங்களை இயக்கவும் செய்துள்ளார். அவரது டி50 படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது.

நடிகர் தனுஷ் அடுத்தடுத்து வெற்றிப்பட கூட்டணியில் படங்களை கமிட் செய்து நடித்து வருகிறார். அவரது அடுத்தடுத்த படங்கள் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து வருகின்றன. திருச்சிற்றம்பலம், வாத்தி படங்களை தொடர்ந்து கடந்த 12ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான கேப்டன் மில்லர் படமும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து தனுஷ் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இதனிடையே அடுத்தடுத்து 2 படங்களை இயக்கவும் செய்துள்ளார். அவரது டி50 படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தின் டைட்டில் உள்ளிட்ட அப்டேட்கள் விரைவில் வெளியாகவுள்ளது. படத்திற்கு ராயன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்ததாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் 30 சதவிகிதம் பாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குவதுடன் தயாரித்து நடிக்கவும் செய்கிறார் தனுஷ். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சேகர் கம்முலா இயக்கத்தில் டி51 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார்.

நடிகர் தனுஷ் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். கோலிவுட்டில்தான் இவரது வெற்றிப்பயணம் துவங்கியது. ஆரம்ப காலங்களில் இவரெல்லாம் நடிக்க வந்துவிட்டாரே என்று கேள்விகளை எதிர்கொண்ட தனுஷ், தற்போது மிகச்சிறப்பான கதைக்களங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். கோலிவுட், டோலிவுட் பாலிவுட் மட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். விரைவில் மற்றொரு ஹாலிவுட் படத்திலும் இவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல நீண்ட நாட்களாக நிறுத்தி வைத்திருந்த இயக்கத்தையும் மீண்டும் துவங்கியுள்ளார்.

தனுஷின் ஹாட்ரிக் வெற்றி:

தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் சிறப்பான வசூலுடன் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளன. முன்னதாக திருச்சிற்றம்பலம், வாத்தி படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்த நிலையில் கடந்த 12ம் தேதி பொங்கலையொட்டி வெளியான கேப்டன் மில்லர் படமும் வசூல் சாதனை படைத்துள்ளது.

படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் தன்னுடைய இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களை ஏறக்குறைய நிறைவு செய்துள்ளார் தனுஷ். முன்னதாக அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் டி50 படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது.

தொடர்ந்து சிறிதும் ஓய்வில்லாமல் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான வொன்டர்பார் பிலிம்சிற்காக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை அறிவித்து படத்தை இயக்கியும் நடித்தும் 70 சதவிகித சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார் தனுஷ். இதனிடையே முன்னதாக அறிவிக்கப்பட்ட சேகர் கம்முலாவின் படத்தின் சூட்டிங்கிலும் இணைந்துள்ளார். இந்தப்படத்தில் தனுஷுடன் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளனர். படத்தை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்குப்பட இயக்குநர்களுடன் கூட்டணி:

முன்னதாக வாத்தி என தமிழிலும் சார் என தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியான படத்தையும் தெலுங்குப்பட இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கியிருந்தார். இந்தப் படம் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 120 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலித்து சாதனை புரிந்தது.

இந்நிலையில் அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகவுள்ள டி51 படத்தில் தற்போது தனுஷ் இணைந்துள்ளார். இதனிடையே மூன்றாவது முறையாக விரட்ட பர்வம் படத்தை இயக்கிய வுடுகுல வேணு இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள படத்தில் தனுஷ் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் சோஷியல் மெசேஜ்ஜுடன் இந்தப்படம் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் குறிப்பாக தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஈகிள் மற்றும் பிரபாசின் தி ராஜா சாப் படங்களை தயாரித்து வருகிறது பீப்பிள் மீடியா பேக்டரி. இந்தப் படங்களை தொடர்ந்து தனுஷின் படத்தையும் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தனுஷ் தெலுங்கு சினிமாவில் கிடைத்துள்ள வரவேற்பானது அவருடைய ரசிகர் வட்டத்தை மேலும் பரந்துபடுத்தியுள்ளது. தெலுங்கு இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுவது அங்குள்ள மார்க்கெட்டை புரிந்துகொள்ளவும் தனது நடிப்பை அங்குள்ள ரசிகர்களுக்கு ஏற்ப செய்யவும் உதவியாக இருக்கும் என நம்புகிறார் தனுஷ். அடுத்தப்படத்தில் யாருடன் இணைவார் என்ற தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், முன்னணி தெலுங்கு இயக்குநர்களின் லிஸ்ட்டில் பல பெயர்கள் சுற்றி வருகின்றன.

திறமைமிக்க இயக்குநர்களுடனும், வெவ்வேறு மொழி ரசிகர்களுடனும் இணைந்து பணியாற்றி தன்னை மெருகேற்றிக் கொண்டு வருகிறார் தனுஷ். அடுத்தடுத்து வெளிவரவுள்ள படங்களின் மூலம் அவர் இன்னும் எந்த உயரங்களை எட்டப்போகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Tags

Next Story