நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா மீது நிலுவையில் உள்ள வழக்கை விசாரிக்க தடை
பைல் படம்.
வேலையில்லா பட்டதாரி படத்தில் புகை பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறாதது தொடர்பாக நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகார் மீதான விசாரணைக்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில், நடிகர் தனுஷ் புகைபிடிக்கும் காட்சிகள் வரும் போது, திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம்பெறாததால், வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுசுக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த புகார் மீதான விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், புகாரை ரத்து செய்யக் கோரியும் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.சந்திரேகரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி வழக்கை ரத்து செய்வது தொடர்பான வாதங்களை முன்வைத்தார். அதனை ஏற்ற நீதிபதி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள புகார் மீதான விசாரணைக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu