ஐ.சி.யு.வில் பிரபல காமெடி நடிகர் அனுமதி: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை

ஐ.சி.யு.வில் பிரபல காமெடி நடிகர் அனுமதி: மருத்துவர்கள் தீவிர சிகிச்சை
X
இருதயக்கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் போண்டா மணிக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் திரைப்படங்களில் பல்வேற் நகைச்சுவை காட்சிகளில் தோன்றி நடித்தவர், நடிகர் போண்டாமணி, வயது 58. இவரது இயற்பெயர், கேதீஸ்வரன். இவரது சொந்த நாடு இலங்கை என்றாலும், இலங்கை கலவரத்தின் போது தமிழகத்திற்கு வந்தார்.

பின்னர், சென்னைக்கு வந்து திரைப்படங்களில் வாய்ப்பு தேடினார். 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கவுண்டமணி, வடிவேலு, விவேக் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்தாலும், இவர் நடித்த சுந்தரா டிராவல்ஸ், வின்னர், மருதமலை படங்கள் போண்டா மணிக்கு தனிப்புகழை தேடித் தந்தன. "அடிச்சு கேட்பாங்க, அப்பவும் சொல்லாதிங்க" என்ற வசனம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த நிலையில், நடிகர் போண்டா மணிக்கு இதய கோளாறு பாதிப்பு இருந்துள்ளது. இதனால் உடல்நலன் பாதிக்கப்பட்டு, இன்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!