மிரட்டும் அல்லு அர்ஜுனின் புதிய கெட்டப்..!
தெலுங்குப் பட உலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் 'புஷ்பா' படத்தில்," புஷ்பான்னா ஃப்ளவர்னு நினைச்சியா, ஃபயருடா"ன்னு பேசிய வசனங்கள் ரசிகர்களின் மனத்திலிருந்து அத்தனை எளிதில் மறக்கடித்திட முடியாது. ரசிகர்களை அந்தளவுக்கு கவர்ந்திழுத்தது. அதோடு, படமும் திரையிட்டவுடன் நிதானமாக இருந்து அதன்பிறகு வேகமெடுத்து, வேற லெவல் என்று அனைவரையும் ஈர்த்து, வசூலை அள்ளி சூப்பர் ஹிட்டானது.
இந்தப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டவர்களின் நடிப்பு படத்துக்கு மேலும் பலம் சேர்த்தது. இவர்களது கேரக்டர் படத்தில் சிறப்பாக வெளிப்பட்டது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் வெளியாக உள்ள நிலையில், வரும் ஆகஸ்டில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தை காட்டிலும் இந்த இரண்டாவது பாகம் மிரட்டும் என்றும் அதற்கேற்ப திரைக்கதையை மாற்றி அமைத்து வருவதாகவும் இயக்குநர் சுகுமார் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அண்மையில், இயக்குநர் சுகுமார் குறித்து பேசிய ஃபஹத் ஃபாசில், இந்தப் படத்தின் மூன்றாவது பாகத்திற்கும் இயக்குநர் சுகுமாரிடம் கதை உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், தற்போது விளம்பரப் படம் ஒன்றிற்காக தன்னுடைய கெட்டப்பை முற்றிலும் வித்தியாசமாக மாற்றிக் கொண்டுள்ளார் அல்லு அர்ஜுன். கூலர்ஸ், சிகரெட், காதில் கடுக்கன் சகிதம் மிகவும் கரடுமுரடான இந்தப் புதிய கெட்டப் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
அல்லு அர்ஜுனின் இந்தப் புதிய கெட்டப்பிற்கு, ரசிகர்கள் ஏராளமான லைக்ஸ்களையும் கமெண்ட்களையும் அள்ளிக் குவித்து வருகின்றனர். பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ள அல்லு அர்ஜுனின் இந்த கெட்டப் திரையுலகினரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளதோடு, நடிகை ராஷ்மிகா மந்தனாவும் இந்தப் புகைப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார் என்பதுதான் ஹைலைட்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu